அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு ?!

0
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு ?!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவ படிப்பில், 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கத்தோலிக்க கல்வி சங்கம் தற்போது மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவிற்கு அரசு பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

மருத்துவ ஒதுக்கீடு !

சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு சட்டம் இயற்றி இருந்தது. ஆனால் அது அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்களுக்கு பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து தற்போது கத்தோலிக்க கல்வி சங்கம் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது.

TN Police “FB Group” Join Now

அதில் தங்கள் சங்கத்தின் கீழ், அரசு உதவி பெறும், 2,286 பள்ளிகள் இயங்குவதாகவும், சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள், அந்த பள்ளிகளில் படித்து வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு TNPSC தேர்வில் 20% ஒதுக்கீடு – ஆளுநர் ஒப்புதல்

பள்ளி கல்வித்துறையின் பொதுவான திட்டங்கள், அரசு பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும் விதத்தில், அதன் கொள்கை உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடையே, பெரிய அளவில் வேறுபாடு கிடையாது, என்றவாறு மனுவில் தெரிவித்து உள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவு !

மேலும், பெரிய வேறுபாடு இல்லாததால் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், 7.5 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை தவிர்க்கும் வகையிலான சட்டப்பிரிவை, ரத்து செய்ய வேண்டும் எனவும் தனது மனுவில் அச்சங்கம் அறிவித்து உள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., 5க்கு, ள்ளிவைத்துள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!