தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து? ஜூன் 28 ல் முதல்வர் ஆலோசனை!

1
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து? ஜூன் 28 ல் முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து? ஜூன் 28 ல் முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து? ஜூன் 28 ல் முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையின் படி நீட் தேர்வு குறித்த அடுத்த கட்ட ஆலோசனை வரும் ஜூன் 28 ம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ளது.

நீட் தேர்வு ஆலோசனை கூட்டம் :

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை அனைவரும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்து வருகிறது.ஆனால் தற்போது வரை ரத்து செய்யப்படவில்லை நடைமுறையில் தான் உள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் மருத்துவ படிப்பிற்கான மத்திய அரசின் நீட் தேர்வை ரத்து செய்வோம் என அறிவித்தார். அதனை தொடந்து ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.

LIC நிறுவனத்தின் பெண்களுக்கான புதிய காப்பீட்டு திட்டம் – தினசரி ரூ.130 முதலீடு!

சமீபத்தில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளித்தார். அதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இடம்பெற்றது. மேலும் இது குறித்து பிரதமரிடம் உரையாடினார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தமிழகத்தில் நீட் தேர்வின் பாதிப்புகளை சேகரித்தது.

TN Job “FB  Group” Join Now

மேலும் மாணவர்கள், பெற்றோர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் போன்றோரிடம் கருத்துக்களை கேட்டறிந்து. 85,935 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது. நீட் தேர்வு குறித்த பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்க வரும் ஜூன் 28 ம் தேதி முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!