தமிழக மக்களுக்கு முதல்வர் சொன்ன அட்வைஸ் – என்னனு பாருங்க !
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் இருந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு வருகின்றது. இப்படியாக இருக்க, தற்போது நிருபர்களிடம் பேசிய முதல்வர் மக்கள் அனைவரும் இனி வரும் நாட்களில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவினை நீடித்து வந்தது. இப்படியாக இருக்க, ஒவ்வொரு வாரமும் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்த வாரம் கூடுதல் தளர்வுகளாக பேருந்துகள் இயங்கலாம் என்றும் உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருப்பதி ஏழுமலையான் சாமி தரிசனத்திற்காக டிக்கெட் – புதிய அறிவிப்பு வெளியீடு!!
இப்படியாக இருக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதே போல் மக்கள் ஊரடங்கு உத்தரவில் கடைபிடிக்க வேண்டியவை பற்றியும் அவர் காணொளி வாயிலாக தெரிவித்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
‘மக்கள் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இந்த அபாயமான காலகட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தங்களது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். மக்கள் யாரும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டது என்று அலட்சியமாக இருந்து விட கூடாது. மக்களின் அன்றாட வாழ்வியல் சுழல் பாதிக்கப்பட்ட காரணத்தால் தான் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது’ இவ்வாறாக பேசியுள்ளார்.
Noo