விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு சலுகைகள் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

0
விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு சலுகைகள் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு சலுகைகள் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு சலுகைகள் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விவசாயிகளும், வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சலுகைகளை அறிவித்து உள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் தமிழகம் முழுவதும் பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன. அத்தியாவசிய பொருட்களான பால், உணவு மற்றும் மருந்து போன்றவை மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மற்ற தொழில்களில் பாதிப்படைந்தவர்களுக்கு முதல்வர் அவர்கள் சலுகைகளை அறிவித்து உள்ளார். அவை,

  • காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான பயன்பாட்டு கட்டணம் ஏப்ரல் 30 வரை வசூலிக்கப்படாது.
  • காய்கறிகள் மற்றும் பழங்கள் சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். வியாபாரிகள் சந்தை கட்டணத்தை வரும் 30ம் தேதி வரை செலுத்த வேண்டியதில்லை.
  • காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய 500 நடமாடும் வாகனங்கள் ஏற்படுத்தப்படும்.
  • விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை விற்பனை செய்வதில் உதவிட அவசரகால தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • விவசாயிகள் வியாபாரிகளை தொடர்பு கொள்ளுதல், சரக்கு போக்குவரத்து அனுமதி, குளிர்சாதன கிடங்கு போன்ற சேவைகளுக்கு உதவிகள் பெற 044-22253884, 22253883, 22253496, 95000 91904 என்ற எண்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!