இறுதி செமஸ்டர் அரியர் தேர்வு தேதி வெளியீடு !!!

0
இறுதி செமஸ்டர் அரியர் தேர்வுகள் தேதி தொடக்கம்
இறுதி செமஸ்டர் அரியர் தேர்வுகள் தேதி வெளியீடு

இறுதி செமஸ்டர் அரியர் தேர்வுகள் தேதி வெளியீடு !!!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் அரியர் தேர்வுகள் தேதி வெளியாகியுள்ளது. அரியர் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வரும் செப் 22 தேதி முதல் தேர்வுகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

செமஸ்டர் தேர்வு ரத்து :

கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்தினை தொடர்ந்து தேர்ச்சி வழங்கப்பட்டது. இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் மட்டும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

அரியர் தேர்வுகள் ரத்து :

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் குறையாத காரணத்தினால் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகளையும் அவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருந்தாலும் ரத்து செய்வதாக தமிழக முதல்வர் அரசாணை வெளியிட்டார். இதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் வரவேற்பும் இருந்தது.

ஆனால் பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்ச்சி வழங்கியதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் அண்ணா பல்கலை ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் யுஜிசி விதிமுறைப்படி தான் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.

இறுதி ஆண்டு செமஸ்டர் அரியர் தேர்வுகள் தொடக்கம் !!!

தற்போது இறுதி ஆண்டு செமஸ்டர் அரியர் தேர்வுகள் வரும் செப் 22 அன்று முதல் தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் வரும் செப் 15 அன்று காலை 10 மணி முதல் செப் 17 மாலை 6 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். தேர்வு தேதிகள் இணைய பக்கத்தில் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

Download Anna University Notice

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!