தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு கீழ் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள District Resource Person பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் |
பணியின் பெயர் | District Resource Person |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
திருநெல்வேலி மாவட்ட காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி District Resource Person பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
District Resource Person கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree தேர்ச்சியுடன் 6 ஆண்டு கால முன் அனுபவம் அல்லது டிகிரி தேர்ச்சியுடன் 8 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
District Resource Person ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
திருநெல்வேலி மாவட்ட தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
IIITDM Kancheepuram நிறுவன வேலைவாய்ப்பு – B.E, B.Tech முடித்தவர்களுக்கு முன்னுரிமை!
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.04.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.