தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு கால அட்டவணை 2022!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பொதுத்தேர்வு கால அட்டவணை 2022!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பொதுத்தேர்வு கால அட்டவணை 2022!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு கால அட்டவணை 2022!

தமிழகத்தில் 2021-22ம் கல்வி ஆண்டிற்கான 10, 11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதித் தேர்விற்கான கால அட்டவணை இன்று (மார்.2) வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது குறித்த முழு அட்டவணையும் இப்பதிவில் காணலாம்.

தேர்வு அட்டவணை

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று பரவலை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதே நேரத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொத்தேர்வுகள் உட்பட மற்ற அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் மாணவர்களின் உயர்கல்விக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் முக்கியம் என்பதால், முந்தைய தேர்வுகளில் அவர்கள் எடுத்திருந்த மதிப்பெண்களை வைத்து தேர்வு முடிவுகள் வெளியானது.

தமிழகத்தில் வேலை தேடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – 100+ முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் முகாம்!

இந்த நிலையில் தற்போதுள்ள கொரோனா தொற்று சூழலை கருத்தில் கொண்டு நடப்பு கல்வியாண்டில் 10 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று (மார்.2) வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே 6ம் தேதியன்றும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே 9 அன்றும் துவங்குகிறது. இப்போது இந்த கல்வியாண்டிக்கான இறுதி வகுப்புகள், 2022-23ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவக்கம் குறித்த விவரங்களை விரிவாக காணலாம்.

முழு தேர்வு அட்டவணை:

12ம் வகுப்பு:
  • செய்முறை தேர்வுகள் – 25.04.2022 முதல் 02.05.2022 வரை
  • பொதுத்தேர்வு – 05.05.2022 முதல் 28.05.2022 வரை
  • தேர்வு முடிவு – 23.06.2022
11ம் வகுப்பு:
  • செய்முறை தேர்வுகள் – 25.04.2022 முதல் 02.05.2022 வரை
  • பொதுத்தேர்வு – 09.05.2022 முதல் 31.05.2022 வரை
  • தேர்வு முடிவு – 07.07.2022
10ம் வகுப்பு:
  • செய்முறை தேர்வுகள் – 25.04.2022 முதல் 02.05.2022 வரை
  • பொதுத்தேர்வு – 06.05.2022 முதல் 30.05.2022 வரை
  • தேர்வு முடிவு – 17.06.2022
6 முதல் 9 ஆம் வகுப்பு:
  • செய்முறை தேர்வுகள் – 02.05.2022 முதல் 04.05.2022 வரை (9ம் வகுப்புகளுக்கு மட்டும்)
  • பொதுத்தேர்வு – 05.05.2022 முதல் 13.05.2022 வரை
  • தேர்வு முடிவு – 30.05.2022
1 முதல் 5ம் வகுப்பு வரை:
  • நடப்புக் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் – 13.05.2022
  • 2022-23ம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் துவக்கம்:
  • 11வது வகுப்பு தவிர, 2022-23ம் கல்வி ஆண்டில் மற்ற வகுப்புகளுக்கு 13.06.2022 முதல் பள்ளிகள் துவங்கும்.மேலும், 11ம் வகுப்புகளுக்கு 24.06.2022 முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!