சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டிம் ப்ரெஸ்னன் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டிம் ப்ரெஸ்னன் - ரசிகர்கள் அதிர்ச்சி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டிம் ப்ரெஸ்னன் - ரசிகர்கள் அதிர்ச்சி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டிம் ப்ரெஸ்னன் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும், மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளருமான டிம் ப்ரெஸ்னன் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி:

36 வயதான இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டிம் ப்ரெஸ்னன் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். 2010 ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா எதிரான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதில் ப்ரெஸ்னனின் சிறப்பான பந்துவீச்சு முக்கிய பங்காக கருதப்பட்டது. 36 வயதான டிம் ப்ரெஸ்னன் நீண்ட இடைவேளைக்கு பிறகு கடந்த ஆண்டு ஏப்ரலில் பிக் பாஸ் லீக்கில் வார்விக்ஷயர் அணியில் விளையாடினார். இத்தொடர் இவரது கடைசி போட்டியாக அமைந்துள்ளது.

மீண்டும் புதிய வகை வைரஸ் – தமிழகத்தில் ஊரடங்கு அமலாகுமோ? வைரலாகும் தகவல்!

வார்விக்ஷயர் அணி போட்டிகளில் ப்ரெஸ்னன் 7,138 ரன்கள் எடுத்தார். இதில் ஏழு சதங்கள் மற்றும் விளையாடிய அனைத்து சீசனிலும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளுடன் 575 விக்கெட்டுகளை எடுத்தார். ப்ரெஸ்னன் இதுவரை 142 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 23 டெஸ்ட் போட்டிகள் அடங்கும். 2007 T20 உலக கோப்பை, 2011 இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் ஒருநாள் உலக கோப்பை, 2015 ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் சாம்பியன் ட்ரோபி தொடர் ஆகியவற்றில் சிறப்பாக விளையாடி தனது பார்ம் மூலம் இங்கிலாந்து அணியை அனைத்து தொடரிலும் குவாலிபையருக்கு முன்னேற செய்தார்.

மாநிலம் முழுவதும் பிப்.3 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு பிறப்பிப்பு!

2011 ஆம் ஆண்டு இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் சச்சின் சிறப்பாக விளையாடினார். அவர் 90 ரன்களை கடந்ததால் நிச்சயம் சதம் அடித்து 100 சதம் எடுத்து வரலாற்று சாதனை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் 91 ரன்கள் எடுத்திருந்தபோது டிம் ப்ரெஸ்னன் பந்தில் அவுட் ஆனார். சச்சினை விக்கெட் எடுத்து டிம் ப்ரெஸ்னன் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்றும் இந்திய மண்ணில் சச்சினை அவுட் செய்தது எனது வாழ்நாள் சாதனை என்று ஓய்வு கடிதத்தில் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!