தமிழகத்தில் தியேட்டர் டிக்கெட் கட்டணம் உயர்வு? சங்கத் தலைவர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக மூடியிருந்த நிலையில், தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளினால் நாளை முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், டிக்கெட் உயர்வு குறித்து தகவல் வெளிவந்துள்ளது.
திரையரங்கம் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே மாதத்தில் 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தொடர்ந்து தொற்று தீவிரமாக பரவி வந்தது. இதனால் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டது. தற்போது சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் மீண்டும் நாளை முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி லைசென்ஸ் கையில் எடுத்துச் செல்ல தேவையில்லை!
50% பார்வையாளர்களுடன் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுடனும் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான்கு மாதங்களுக்கு பின்னர் ஆகஸ்ட் 23ம் தேதியின் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது பற்றி திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அவர், தமிழகத்தில் மொத்தம் 1600 திரையரங்குகள் உள்ளது. அரசின் அறிவுறுத்தலின் படி, 50 சதவீதப் பார்வையாளர்களுடன், முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி செயல்படுத்த உள்ளோம்.
TN Job “FB
Group” Join Now
திரையரங்கப் பணியாளர்கள் அனைவருக்கும் முன்னதாகவே தடுப்பூசி செலுத்தி விட்டோம். தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இது தொடர்பான பேட்ஜ் அணிந்து கொள்ளும் வகையில் திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளோம். தற்போது,தமிழில் ‘அரண்மனை – 3’, ‘சிவக்குமார் சபதம்’, ‘லாபம்’ உள்ளிட்ட திரைப்படங்களும், இந்தி நடிகர் அக்சய்குமார் நடித்த ‘பெல் பாட்டம்’, ‘கான்ஜுரிங் – 3’ உள்ளிட்ட சில திரைப்படங்களும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. மக்கள் வழக்கம்போல் திரையரங்குகளுக்கு வரத் தொடங்கும்போது, திரையரங்குகளில் இயல்பு நிலை திரும்பும்.
ரூ.102 க்கு 28 நாட்களுக்கு 28 ஜிபி டேட்டா – ஜியோவின் அதிரடி ஆஃபர்!
இரண்டு வாரங்களில் திரையரங்குகளில் இயல்பு நிலை திரும்பி விடும். அதற்காக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. ஏற்கெனவே இருந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். கரோனா தொற்று மேலும் குறையும்போது விரைவில் 100 சதவீதப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து திரையரங்குகளிலும் இன்று பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.