சென்னை: ஆபரணத் தங்க விலை அதிரடியாக குறைவு – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0
சென்னை: ஆபரணத் தங்க விலை அதிரடியாக குறைவு - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: ஆபரணத் தங்க விலை அதிரடியாக குறைவு - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: ஆபரணத் தங்க விலை அதிரடியாக குறைவு – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

தமிழகத்தில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் மாறி கொண்டிருக்கிறது. இதையடுத்து இன்றைய தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

தங்கம் விலை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தை வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் கொள்கின்றனர். அதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இவ்வாறு ஏறி கொண்டே போகும் தங்கத்தின் விலை சாமானிய மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இன்று தங்கத்தின் விலை அதிரடி சரிவை கண்டுள்ளது. அதனால் நகைப்பிரியர்கள் இப்போது தங்கம் வாங்குவது உகந்ததாக இருக்கும். இதையடுத்து, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்தும் அதன்பின் ஏறி கொண்டும் இருக்கிறது.

இதனை தொடர்ந்து, தமிழகத்தில் இம்மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 குறைந்தது. அதன்படி ஒரு சவரன் ரூ.38,360க்கு விற்பனையானது. இதே போல் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.4,795க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்பு கடந்த 12ம் தேதி என்றும் இல்லாத அளவுக்கு திடீரென உயர்ந்தது. அதாவது தங்கத்தின் விலை சவரன் ரூ.40 உயர்ந்து ரூ.39,120க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை என்றும் இல்லாத அளவுக்கு அதிரடி சரிவை கண்டுள்ளது. அதனால் இன்று தங்கம் வாங்க நினைப்பவர்கள் தங்கத்தை வாங்கி சேமித்து வைத்து கொள்ளலாம்.

தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,008க்கும் மற்றும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.38 குறைந்து ரூ.4,876க்கும் விற்பனையாகிறது. இதனை தொடர்ந்து வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.63.80க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஒரு கிலோ ரூ.63,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை கொரோனா பரவல் , பண வீக்கம் காரணமாக உயரும் என்றும் கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!