தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – அனைவரும் வருக!

0
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - அனைவரும் வருக!
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - அனைவரும் வருக!
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – அனைவரும் வருக!

வேலை இல்லாமல் தவித்து கொண்டு இருக்கும் இளைஞர்களின் கவலையை போக்கும் விதமாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தற்போது அறிவித்துள்ள அறிவிப்பு அமைந்துள்ளது. இந்த அறிவிப்பில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை வேலை இல்லாத இளைஞர்கள் பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் கீழ் தரப்பட்டுள்ள விவரங்களை படித்துவிட்டு தங்கள் முன்பதிவை தவறாது செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Department of Employment and Training
பணியின் பெயர் Multiple Jobs
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தஞ்சாவூர் வேலைவாய்ப்பு முகாம் பணியிடங்கள்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தற்போது காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பப்பட போவதாக தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் வேலைவாய்ப்பு முகாம் கல்வி தகுதி:

இந்த முகாமில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள்/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் 8,10, Graduation, Post Graduation, Engineering போன்ற ஏதேனும் ஒரு படிப்பை படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

தஞ்சாவூர் வேலைவாய்ப்பு முகாம் அனுபவம்:

இந்த முகாமில் கலந்து கொள்ள அனுபவ விவரம் எதுவும் குறிப்பிடப்படாத காரணத்தால் அனுபவம் உள்ள மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் கலந்து கொள்ள தகுதி உடையவர்களாக கருதப்படுகிறார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

தஞ்சாவூர் வேலைவாய்ப்பு முகாம் வயது வரம்பு:

முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே வேலை தேடி கொண்டு இருக்கும் அனைத்து வயதினரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

தஞ்சாவூர் வேலைவாய்ப்பு முகாம் ஊதியம்:

முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளதால் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் நிறுவனம் மற்றும் பதவியின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

தஞ்சாவூர் வேலைவாய்ப்பு முகாம் தேர்வு செய்யும் முறை:

முகாமில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தஞ்சாவூர் வேலைவாய்ப்பு முகாம் விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பதாரர் 10.4.2022 அன்று காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தற்போது தனது நிறுவனத்தில் காலி பணியிடம் உள்ள தனியார் நிறுவனங்களும் முகாமில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

முகாம் நடைபெறும் முகவரி:

AS SALAM பொறியியல் கல்லூரி,
திருமங்கலக்குடி,
கும்பகோணம் அருகில்,
தஞ்சாவூர்-612102.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!