தெலுங்கானாவில் நாளை BRS பொதுக்கூட்டம் – பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் பங்கேற்பு!!
நாளை நடைபெற இருக்கும் பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் மெகா கூட்டத்தில் பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
மெகா கூட்டம்
தெலுங்கானா மாநிலத்தை சார்ந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி (TRS) கட்சி, பாரத ராஷ்டிர சமிதி (BRS) என்ற பெயரில் தேசிய அரசியலில் ஈடுபட இருக்கிறது. அந்த வகையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் முதல் பொதுக்கூட்டம் தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் ஜனவரி 18ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சிக்கான தேசிய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படலாம் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
சீனாவின் மக்கள் தொகை கடும் சரிவு – அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரங்கள்!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில், நாளை நடைபெற இருக்கும் பாரத ராஷ்டிர சமிதியின் பொதுக்கூட்டத்தில், பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் அதாவது பாஜக தலைமையின் கீழ் இல்லாத மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் தெலுங்கானா மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.