TCS நிறுவனத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2022 – இன்றே கடைசி நாள்!

0
TCS நிறுவனத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2022 - இன்றே கடைசி நாள்!
TCS நிறுவனத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2022 - இன்றே கடைசி நாள்!
TCS நிறுவனத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2022 – இன்றே கடைசி நாள்!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான TCS இன்ஜினியரிங் பட்டதாரிகளிடமிருந்து ஆஃப் கேம்பஸ் டிஜிட்டல் பணியமர்த்தலுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று மாலை 6 மணியுடன் கால அகவாசம் முடிகிறது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி:

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்பம் மட்டும் அல்லாமல் வணிகச் செயலாக்க அயலாக்க சேவைகளையும் வழங்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கொரோனா எழுச்சி காரணமாக பல்வேறு தொழில் துறைகள் முடக்கப்பட்டு, பணியாளர்கள் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டது. ஆனால் ஐடி துறை எந்த பாதிப்பும் இல்லாமல் இயங்கி வந்தது. IT துறை பணியாளர்கள் WORK FROM HOME யில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை TCS வெளியிட்டு உள்ளது.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

சம்பள விவரம்: தேர்வு செய்யப்படும் இளங்கலை பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு 7 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு 7.3 லட்சம் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் தகுதி: இளங்கலை அல்லது முதுகலை தொழில்நுட்பம் (B.Tech) அல்லது (M.Tech) / இளங்கலை அல்லது பொறியியல் முதுகலை (BE) அல்லது (ME) / கணினி பயன்பாடு மாஸ்டர் (MCA) / முதுநிலை அறிவியல் (M.Sc) மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகத்தில் 2019, 2020, 2021 இல் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 70% மொத்த மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? பெற்றோர்கள் கோரிக்கை!

விண்ணப்பதாரர் பணி அனுபவம்: விண்ணப்பதாரர்கள் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் குறைந்தபட்சம் 6 – 12 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நிறுவனம் நடத்தும் இரண்டு சுற்றுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். தேர்வில், அட்வான்ஸ்டு கேண்டிடேட் ஆப்டிடியூட் (40 நிமிடங்கள்), வெர்பல் எபிலிட்டி (10 நிமிடம்), அட்வான்ஸ்டு கோடிங் (60 நிமிடம்) அடிப்படையில் பல கேள்விகள் இருக்கும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று ( பிப்.25) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

விண்ணப்பிப்பது எப்படி? அதிகாரப்பூர்வ தளத்தில் கிடைக்கும் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, இங்கே டிஜிட்டல் டிரைவ் க்கு விண்ணப்பிக்கவும். மேலும் விண்ணப்பதாரர் ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட முறை விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!