TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS, இளங்கலை பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

வேலை வாய்ப்பு

முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது ஆப்-கேம்பஸ் டிஜிட்டல் பணியமர்த்தல் திட்டத்திற்கு பொறியியல் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 25 ஆகும். இதற்காக விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்றும் தேர்வுகள் நடைபெறும் இறுதி தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் TCS தெரிவித்துள்ளது.

TNPSC Group 2, 2A தேர்வு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?

இப்போது TCS நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. இது குறித்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி, இளங்கலை பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7 லட்சமும், முதுகலை முடித்தவர்கள் ஆண்டுக்கு ரூ.7.3 லட்சமும் சம்பளமாக வழங்கப்பட இருக்கிறது. இப்போது தகுதியுள்ள பொறியியல் பட்டதாரிகள் கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி தங்களது விண்ணப்பங்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்ப செயல்முறை:
  • TCS NextStep என்ற போர்ட்டலில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவு செய்து பூர்த்தி செய்யவும்.
  • உங்கள் விண்ணப்பத்தின் நிலை Application Received என்று இருக்க வேண்டும்.
  • இப்போது CT/DT ஐடியை கைவசம் வைத்திருங்கள்.
  • இந்த CT/DT ஐடி இருந்தால், TCS NextStep போர்ட்டலில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய முடியும்.
  • ஒரு புதிய பயனராக இருந்தால், தயவுசெய்து TCS NextStep போர்ட்டலில் உள்நுழைந்து Register Now என்பதைக் கிளிக் செய்யவும்.
  • IT வகையைத் தேர்வுசெய்து, விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க தொடரவும்.
  • இறுதி கட்டமாக, டிஜிட்டல் டிரைவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு:

ஒரு விண்ணப்பதாரர்கள் இந்த இணைப்பில் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!