TNPSC Group 2, 2A தேர்வு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
TNPSC Group 2, 2A தேர்வு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு - புதிய பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?
TNPSC Group 2, 2A தேர்வு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு - புதிய பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?
TNPSC Group 2, 2A தேர்வு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பின்படி, குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் அதை பதிவிறக்கம் செய்யும் முறைகள் குறித்து இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC பாடத்திட்டம்:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தான் அரசு பணிகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். கடந்த 2 வருடங்களாக TNPSC தேர்வுகள் கொரோனா தொற்று அச்சம் காரணமாக நடத்தப்படாமல் இருந்தது. குரூப் 2 தேர்வு மூலம் அரசுத்துறைகளில் 5529 காலியிடங்களை நிரப்ப உள்ளது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய 116 பணியிடங்கள் குரூப் 2 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – மார்ச் 1 கடைசி நாள்!

குரூப் 2 தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்தக் தேர்விற்கு பொதுபிரிவினருக்கு 18 முதல் 32 வரை வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என்று நடத்தப்படுகின்றது. முதல் பிரிவில் தமிழ் மொழிப்பாடத்தில் 100 வினாக்களும், இரண்டாம் பிரிவில் பொது அறிவு பகுதியில் 75 வினாக்களும் கணிதப் பகுதியில் 25 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதனை பற்றிய முழு விவரங்களை அதிகாரபூர்வ இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான தலைப்புகள் (விரிவான எழுத்துத் தேர்வு)
  • தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்
  • ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
  • சுருக்கி வரைதல் (Precis Writing)
  • பொருள் உணர்திறன் (Comprehension)
  • திருக்குறள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்
  • கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது)
  • தமிழ் மொழியறிவு
தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம்:
  • தற்கால நிகழ்வுகள்
  • சமுதாயப் பிரச்சனைகள்
  • சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்
  • இந்திய பொருளாதாரம் தொடர்பான தலைப்புகள்
  • அறிவியலும் தொழில்நுட்பமும்
  • கலையும் பண்பாடும்
  • பகுத்தறிவு இயக்கங்கள் – திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்
  • இக்காலத் தமிழ்மொழி – கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்
  • தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் (பெண்கள், விவசாயிகள்), சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு – இடஒதுக்கீடும் அதன் பயன்களும், தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு
  • சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக, பொருள் வேறுபாடு அறிதல், பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், எதிர்மறை வாக்கியம், பிழை நீக்கி எழுதுக
  • திருக்குறள் தொடர்பாக கீழ்காணும் தலைப்புகளில் கட்டுரை எழுதுதல்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!