தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிவிப்பு!

0
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிவிப்பு!

தமிழகத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளால் இலேசானது முதல் மிதமான மழை இன்று (ஜன.2) மற்றும் நாளை (ஜன.3) பெய்யக்கூடும். அதே போல ஜன. 4 மற்றும் ஜன. 5 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இலேசான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதே போல ஜன. 6 முதல் ஜன. 8 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் தமிழக கடலோரப்பகுதிகளில் ஜன. 2 முதல் ஜன. 6 வரையும், வங்கக்கடல் பகுதிகளில் ஜன. 2 முதல் 3 வரையும், அரபிக்கடல் பகுதிகளில் ஜன.2 முதல் ஜன. 6 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNTET தேர்வுக்கு இந்த முறையில் ரெடி ஆகுங்க – Preparation Tips & Tricks!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!