5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல் – அவசர நிலை உத்தரவு!!

0
5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல் - அவசர நிலை உத்தரவு!!
5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல் – அவசர நிலை உத்தரவு!!

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் எழுந்துள்ள வன்முறை சம்பவம் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு:

2023 மே மாதம் முதல் மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி மற்றும் குகி பழங்குடியின சமூகத்தினருக்கு இடையிலான மோதல்கள் அதிக வன்முறையுடன் நடந்து வந்தது. இதனை தவிர்க்கும் பொருட்டு அங்கு பல மாதங்களாக ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டு, இணையம் தடை செய்யப்பட்டிருந்தது. அங்கு நடந்த வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ராணுவத்தினர் உட்பட பல்வேறு பாதுகாப்பு படையினரும் மாநிலத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். சமீபத்தில் தான் அங்கு இயல்பு நிலை திரும்பி ஊரடங்கு உத்தரவுகள் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மீண்டும் வன்முறைகள் எழுந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் மணிப்பூர் மாநிலத்தின் தௌபல், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங், விஷ்ணுபூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலும் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மோதலில் 180 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!