தமிழக பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு – மீண்டும் மூடப்படும் பள்ளிகள்??

3
தமிழக பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு - மீண்டும் மூடப்படும் பள்ளிகள்??
தமிழக பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு - மீண்டும் மூடப்படும் பள்ளிகள்??
தமிழக பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு – மீண்டும் மூடப்படும் பள்ளிகள்??

தமிழகத்தில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் தொடர்ச்சியாக மாணவர்கள் மற்றும ஆசிரியர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளிகளில் கொரோனா:

தமிழகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி என பல்வேறு வழிமுறைகளில் பாடங்கள் எடுக்கப்பட்டது. பின்னர் தொற்று குறைந்த காரணத்தால் பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் கல்வி நிறுவனங்களை திறக்க ஆரம்பித்தன.

பொறியியல் மாணவர்களுக்கு மாதிரி பயிற்சி தேர்வுகள் – அண்ணா பல்கலை திட்டம்!!

தமிழகத்திலும் கடந்த ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கின. மாணவர்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளி மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் சேலம், திண்டுக்கல், திருப்பூர் என தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தமிழக அரசு கல்லூரியில் 500 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் – நியமனம் வழங்க எதிர்ப்பு!!

இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள் பயிலும் பள்ளிகள் மட்டும் மூடப்பட்டு உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பிப்ரவரி மாதம் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் அவர்கள் வரும் ஜனவரி 28ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதன் முடிவில் பள்ளிகளை மூடலாமா? அல்லது தொடர்ந்து செயல்படலாமா? என முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. நீண்ட விடுப்பில் இருந்த கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மாத அவகாசம் கூட கொடுக்காமல் பிப்8 ல் திறப்பதென்பது மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும். ஹாஸ்டல் இல்லாதவர்கள் வீடு பார்க்க வேண்டும். போக்கு வரத்து மற்றும் பொருளாதார வசதி ஆகியவற்றுக்காக நிச்சயம் கால அவகாசம் தேவை. எனவே மார்ச் முதல் வாரத்தில் கல்லூரிகளைத் திறக்க முதல்வர் ஆணையிட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here