தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? பாஜக மாநில தலைவர் கருத்து!
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இதனை நீட்டிப்பது குறித்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 24ம் தேதி அன்று தளர்வுகளற்ற ஊரடங்கு விதிக்கப்பட்டு அந்த கட்டுப்பாடுகள் வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 7ம் தேதிக்கு பின்பு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்படுமா அல்லது மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
EPFO ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு வெளியீடு!!
இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிப்பதில் தவறவில்லை என்று தெரிவித்தார். மேலும் கொரோனாவின் முதல் அலையில் சிறப்பாக சூழ்நிலைகளை கையாண்டு தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
விரைவில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும் கடந்த மாதம் தமிழகத்திற்கு 20 லட்ச தடுப்பூசிகள் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர் இன்னும் சில தினங்களில் மேலும் ஒரு லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தடையும் என்று தெரிவித்தார். மத்திய அரசு தற்போது தடுப்பூசிகளை மக்கள் தொகை, பாதிப்பு சதவிகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வழங்கி வருகிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியுள்ளார்.