முன்பதிவு செய்யாத பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் – பொதுமக்கள் கவனத்திற்கு!!

0
முன்பதிவு செய்யாத பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் - பொதுமக்கள்
முன்பதிவு செய்யாத பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் - பொதுமக்கள்
முன்பதிவு செய்யாத பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் – பொதுமக்கள் கவனத்திற்கு!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன.13) முதல் முன்பதிவு செய்யாமல் இருக்கும் பயணிகளுக்காகவும் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பேருந்துகள்:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற ஜன. 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன.13) முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால், வெளியூர் செல்லும் பயணிகளுக்கு வசதிக்காக நேற்றில் இருந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இப்படி தயாராகுங்க – நிச்சயம் கையில் வேலை!!

அதன் படி, தென்மாவட்டங்களுக்கு மக்களுக்காக நேற்றில் இருந்து கிளாம்பாக்கத்தில் SETC பேருந்துகள் இயங்கி வருகிறது. ஆனால், புதிய பேருந்து நிலையம் என்பதால் பயணிகள் பேருந்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து SETC பேருந்துகள் மட்டுமே இயங்குவதால் வெளியிடங்களுக்கும் செல்ல முடியவில்லை. இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக இன்று முதல் முன்பதிவு செய்யப்படாத பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!