தமிழகத்தின் தடுப்பு நடவடிக்கைகள் – முதல்வரின் அறிவிப்புகள்

0
தமிழகத்தின் தடுப்பு நடவடிக்கைகள் - முதல்வரின் அறிவிப்புகள்

தமிழகத்தின் தடுப்பு நடவடிக்கைகள் – முதல்வரின் அறிவிப்புகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து – சீனா புதிய முயற்சி

தமிழகத்தில் இதுவரை 26 மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

அந்த அறிவிப்பிகளினை கீழே அறிந்து கொள்ளலாம் :

  • தமிழகத்தில் மார்ச் 31 வரை அறிவிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
  • தமிழகத்தில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான SWIGGY, ZOMATO போன்றவற்றிற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.
  • உணவகங்கள் மற்றும் மளிகைக்கடைகள் இயங்குவதற்கான நேரம் குறைக்கப்படவில்லை, நாள் முழுவதும் இயங்கலாம்.
  • தனியார் வங்கிகள், நிறுவனங்கள் தினசரி, வார மற்றும் மாத வட்டிக்காசு வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 54,000 நபர்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே வர வேண்டும். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராததை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் இடங்கள் விசாலமானதாக இருக்க வேண்டும்.
  • அத்தியாவசிய பணியை மேற்கொள்ளும் நபர்கள், அதிகாரிகள் ஆட்சியர் அலுவலகத்தில் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
  • அனைத்து கிராமங்களிலும் தண்டோரா மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அறிவிப்புகளை கூற வேண்டும்.

பாதிப்புகள் இன்னும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!