தமிழகத்தில் 25 ஆயிரத்தை தொடும் தினசரி கொரோனா பாதிப்பு – மாவட்ட வாரியாக முழு விபரம்!!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தினசரி புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நாள்தோறும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, வார இறுதி முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் நோய் பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,898 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,31,468 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 195 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 14,974 ஆக அதிகரித்துள்ளது. இன்று வரை 2,35,45,987 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
இன்று புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 14,683 ஆண்கள், 10,215 பெண்கள் மற்றும் 0 திருநங்கைகள் ஆவர். தமிழகம் முழுவதும் 69 அரசு மற்றும் 196 தனியார் உட்பட 265 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 21,546 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,51,058 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:
மாவட்டம் | இன்றைய பாதிப்புகள் | வித்தியாசம் (கடந்த 24 மணிநேரத்தில்) | இன்றைய உயிரிழப்புகள் | வித்தியாசம் (கடந்த 24 மணிநேரத்தில்) |
அரியலூர் | 88 | -24 | 0 | 0 |
செங்கல்பட்டு | 2039 | 284 | 16 | 0 |
சென்னை | 6678 | +387 | 69 | +11 |
கோவை | 2068 | +39 | 4 | +1 |
கடலூர் | 366 | +70 | 3 | -1 |
தர்மபுரி | 230 | +25 | 1 | -1 |
திண்டுக்கல் | 307 | +27 | 3 | +2 |
ஈரோடு | 590 | -26 | 0 | -1 |
கள்ளக்குறிச்சி | 125 | -6 | 1 | +1 |
காஞ்சிபுரம் | 836 | +295 | 13 | +9 |
கன்னியாகுமரி | 445 | -79 | 14 | +6 |
கரூர் | 229 | -29 | 4 | +4 |
கிருஷ்ணகிரி | 390 | +80 | 0 | -5 |
மதுரை | 996 | +82 | 5 | -3 |
நாகப்பட்டினம் | 333 | -34 | 2 | 0 |
நாமக்கல் | 322 | -45 | 4 | +3 |
நீலகிரி | 113 | -26 | 0 | 0 |
பெரம்பலூர் | 60 | -54 | 0 | 0 |
புதுக்கோட்டை | 182 | +32 | 2 | +1 |
ராமநாதபுரம் | 190 | -70 | 0 | 0 |
ராணிப்பேட்டை | 275 | +70 | 6 | -2 |
சேலம் | 614 | +1 | 4 | -3 |
சிவகங்கை | 148 | +10 | 0 | 0 |
தென்காசி | 280 | +65 | 4 | +3 |
தஞ்சாவூர் | 165 | -155 | 6 | +1 |
தேனி | 456 | +68 | 2 | -2 |
திருப்பத்தூர் | 176 | +50 | 1 | -1 |
திருவள்ளூர் | 1560 | +175 | 12 | +7 |
திருவண்ணாமலை | 304 | +136 | 2 | +1 |
திருவாரூர் | 269 | +33 | 1 | 0 |
தூத்துக்குடி | 796 | +55 | 0 | -1 |
திருநெல்வேலி | 688 | +35 | 6 | 2 |
திருப்பூர் | 443 | -197 | 1 | -1 |
திருச்சி | 746 | +94 | 5 | +2 |
வேலூர் | 614 | +78 | 1 | -5 |
விழுப்புரம் | 466 | +54 | 2 | -1 |
விருதுநகர் | 269 | +65 | 1 | 1 |
சர்வதேச விமான நிலையம் | 2 | -1 | 0 | 0 |
உள்ளூர் விமான நிலையம் | 0 | -3 | 0 | 0 |
ரயில்வே கண்காணிப்பு | 0 | 0 | 0 | 0 |
மொத்தம் | 24,898 | 3,059 | 195 | 82 |