தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? மத்திய கல்வித்துறையுடன் ஆலோசனை!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? மத்திய கல்வித்துறையுடன் ஆலோசனை!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? மத்திய கல்வித்துறையுடன் ஆலோசனை!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? மத்திய கல்வித்துறையுடன் ஆலோசனை!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை மத்திய கல்வித்துறையிடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் திறந்து செயல்படாத நிலை இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தான் கல்வி கற்பிக்கப்பட்டது. ஜனவரி மாதத்தில் பள்ளிகள் திறந்த போதிலும் ஒரு மாதத்தில் மூடப்பட்டது. 1 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரையும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கான 2டிஜி மருந்து – இன்று முதல் விநியோகம்!!

12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மே மாதத்தில் நடக்க இருந்தது. தற்போது தொற்றின் பரவல் அதிகரித்த காரணத்தால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைத்து அரசு உத்தரவிட்டது. இரண்டாம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது தேர்வை நடத்துவது இயலாத காரியம். இதனால் தேர்வுகளை உடனே நடத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றது.

TN Job “FB  Group” Join Now

மாணவர்களின் கல்லூரி படிப்பிற்கு மத்திய அரசின் விதிகள் தான் பின்பற்றப்படுகிறது. 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து ஆல்பாஸ் வழங்கினால் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை எவ்வாறு நடத்தப்படும் என்பது தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இதனால் தமிழக பள்ளிக் கல்வித்துறை மத்திய கல்வி துறையின் ஒப்புதலை பெற திட்டமிட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படலாம், இல்லையெனில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!