தமிழகத்தில் 108 மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு – செப்.9ல் ஏற்பாடு!

0
தமிழகத்தில் 108 மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு - செப்.9ல் ஏற்பாடு!
தமிழகத்தில் 108 மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு - செப்.9ல் ஏற்பாடு!
தமிழகத்தில் 108 மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு – செப்.9ல் ஏற்பாடு!

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 108 மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நாளை மறுநாள் (செப்.9 ) நடைபெற இருக்கிறது.

நேர்முகத் தேர்வு:

திருநெல்வேலி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் உதவியாளர் பணி காலியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த பணிக்கான ஆட்களை தேர்வு செய்ய பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மங்கம்மாள் சாலையில் உள்ள சமுதாய நலகூடத்தில் நாளை மறுநாள் (செப். 9) காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த பணியில் சேர பி.எஸ்.சி நர்சிங், டிஎம்எல்டி, டிஎன்ஏ படிப்பு, 12 ஆம் வகுப்பிற்கு பின் 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் இந்த பணியிடங்களில் சேர 19 வயது முதல் 30 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15,435 மாதம் சம்பளமாக வழங்கப்படும். மனிதவளத்துறையின் நேர்முகமாக எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம் – உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி குறித்து தேர்வு நடைபெறும்.

அமிர்தாவிற்கு எதிரியாக மாறும் கணேஷ் அம்மா அப்பா.. அடுத்து நடக்க போவது என்ன? “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!

அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் பயிற்சி வழங்கப்படும். அது மட்டுமில்லாமல் பயிற்சியின் போது தங்கும் வசதி செய்து தரப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-28888060, 75, 77 ஆகிய தொலைபேசி எண்களில் காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இது குறித்த கூடுதல் தகவல்களை 108 சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!