விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" முதல் சன் டிவி "ரோஜா" வரை - ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!

தமிழ் சின்னத்திரையில் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும், அதில் பிரபலமான ஒரு சில சீரியல்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெறுகின்றனர். அந்த சீரியல்களில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோக்களில் ரசிகர்களின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் இருக்கிறது.

டாப் கமெண்ட்ஸ்:

தமிழ் சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்ப்பு உண்டு. என்ன தான் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சில சீரியல்கள் மட்டுமே உள்ளன. அந்த சீரியல்களில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், அதில் ரசிகர்கள் நகைச்சுவையாக பல கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் டாப் கமெண்ட்ஸ் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா இறந்த நிலையில் தனத்தின் கனவில் லட்சுமி அம்மா வருவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோ பார்த்த ரசிகர் ஒருவர் அடுத்த ஒரு 2 மாசத்துக்கு லக்ஷ்மி அம்மாவ இப்படிதான் காட்டுவீங்க போல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தனத்தக்கு இப்படி கனவு வரணுமே இது தானே உலக வழக்கம் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் லக்ஷ்மி அம்மாவை மிஸ் செய்வதாகவே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இது எல்லாம் சொன்னீங்க ஆனா கண்ணன பத்தி ஒன்னுமே சொல்லாம போறீங்களே அம்மா என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில், வேணு நெஞ்சு வலி வருவது போல நடித்து கண்ணம்மாவை வர வைக்கிறார். மேலும் கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து வாழ வேண்டும் என சத்தியம் வாங்குகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதி கண்ணம்மா பார்த்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்று கூறியுயள்ளார். மற்றொரு ரசிகர் பாரதி கண்ணம்மா இந்த ஜென்மத்தில் ஒன்றுசேர மாட்டார்கள் என கூறியுள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பழைய ஐஸ்வர்யா – கண்ணனுடன் வெளியான வீடியோ!

போன வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த வாரம் பாரதி கண்ணமா வா… என ஒரு ரசிகர் கேட்டுள்ளார். அப்படியே பாரதியை டிஎன்ஏ எடுக்க சொல்லுங்க என்று பதிவிட்டுள்ளார். பாரதியும் கண்ணம்மாவும் சேரவே சேர மாட்டார்கள் யாரும் அதிர்ச்சி அடைய தேவையில்லை என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். பாரதி ..கண்ணம்மாவ காதலிப்பது போன்ற நடித்த மாதிரி இதுவும் பொய் இல்லையே என ஒரு ரசிகர் கேட்டுள்ளார். இந்த சீரியல சீக்கிரம் முடிச்சிருவீங்கன்னு முதல்ல எங்களுக்கு சத்தியம் பண்ணி குடுங்கப்பா என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா பெரிய சமையல் அர்டேரை முடிக்க அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்கிறார். அதை பார்த்த கோபி பாக்கியாவை திட்டுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த சீரியலை பார்த்த ரசிகர் ஒருவர், சீரியல் என்றாலும் பெண்கள் நினைத்தால் முடியும் என்பதை நடித்துக்காட்டும் பாக்கியலக்ஷ்மியும் சிங்கப்பெண் தான்… என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ 8 வின்னர் ஸ்ரீதர் சேனா செய்த காரியம் – மக்களுக்கு நன்றி கூறி பதிவு!

மற்றொரு ரசிகர் இந்த சீரியலுக்கு பாவம் பாக்கியா என்டு பெயர் வைச்சிருக்கலாம் என்றும், கோபி கேரக்டர் ரொம்ப பாவம்!! பொண்டாட்டிகிட்ட எப்பவும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே பேசறது ரொம்ப கஷ்டமப்பா என்றும் கூறியுள்ளனர். மேலும ஒரு ரசிகர் கோபி க்கு புடிச்ச ஒரே விஷயம் ராதிகா தான் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபியை விமர்சிக்கும் அளவுக்கே பதிவிட்டுள்ளனர்.

ரோஜா

ரோஜா சீரியலில் செண்பகத்தை ஒரு கோவிலுக்கு கூட்டி செல்ல அப்போது அவருக்கு அர்ஜுன் ரோஜாவின் சிறு வயது ஞாபகம் வருகிறது. இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செண்பக த்திற்கு பழைய ஞாபகம் வர இன்னும் 500 எபிசேட்டு மேல் ஆனாலும் ஆகலாம் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செண்பகத்துக்கு பழைய நினைவுகள் திரும்பி ரோஜாவுடன் சேர்ந்து இருப்பதை பார்க்க வேண்டும் என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். இவ்வளோ சீக்கிரம் எல்லாம் இயக்குனர் நம்மை சந்தோச பட விட மாட்டார் மக்களே… என ஒரு ரசிகர் கூறியுள்ளார். இவுங்களுக்கு பழைய நியாபகம் வர்றதுக்குள்ள எனக்கு வயசாகிடும் என ஒருவர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சனமே செய்துள்ளனர்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில் சரவணனும் சந்தியாவிற்கும் இடையே இருக்கும் பிரச்சனை எல்லாம் முடிந்த நிலையில், காதல் காட்சிகள் குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அப்பாடா இப்பதான் ரொமான் போஷன் வருது அதுக்குள்ள சண்டைய மூட்டி விட்ராதீங்கடா என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியே தொடரட்டும் என்றே பதிவிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!