‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் விஜே தீபிகா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் விஜே தீபிகா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் விஜே தீபிகா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் விஜே தீபிகா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா, முகப்பரு காரணமாக சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது தனது முகப்பரு பிரச்சனையில் இருந்து மீண்டு இருக்கிறார் என்பது பற்றி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இதனால் சீரியலில் அவர் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விஜே தீபிகா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கடைக்குட்டி கண்ணன் காதல் திருமணம் செய்து கொண்டதால் சீரியலில் பெரிய விரிசல் ஏற்பட்டது. கண்ணனை துரத்தி துரத்தி காதலித்து, அவரை திருமணம் வரை கொண்டு சென்ற ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் முதலில் விஜே தீபிகா நடித்து வந்தார். அவர் சீரியலில் ஜோடியாக நடித்ததற்கே நல்ல வரவேற்பு இருந்தது. கண்ணன் ஐஸ்வர்யா ஜோடி சமூக வலைத்தளங்களில் நல்ல ட்ரெண்ட் ஆனார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகாவிற்கு அதிகமாக முகப்பரு பிரச்சனை வந்தது.

Vijay TV Bigg Boss Promo | டிக்கெட் டூ பைனல் டாஸ்க் குறித்து கேள்வி கேட்ட நிரூப் – ரசிகர்கள் ஷாக்!

அதனால் சீரியல் நிர்வாகம் தரப்பில் இருந்து கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அவரால் சரி செய்ய முடியவில்லை என்பதால் அவர் சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஜே தீபிகா தன்னுடைய முகப்பரு பிரச்சனையில் இருந்து மீண்டு இருக்கிறார். அது குறித்து தனது யூடுப் சேனலில் வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிகமாக பிரச்சனைகளை சந்தித்தாராம்.

Vijay TV Bigg Boss 5 Unseen Promo | ப்ரியங்காவிற்கு பொட்டு வைத்த தாமரை, குழப்பத்தில் ரசிகர்கள்!

அப்போது டாக்டர் சொன்ன அறிவுரைகளை பின்பற்றி அவர் சரி செய்து இருக்கிறார். அவருக்கு தற்போது முகப்பரு பிரச்சனை அறவே இல்லாமல் இருக்கிறது. அதனால் தீபிகா மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் அவர் மீண்டும் ஐஸ்வர்யாவாக கண்ணனிற்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என கமெண்ட் செய்துள்ளனர். அவரை விரைவில் சின்னத்திரையில் பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!