தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை!

0
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை!

நேற்று ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல்‌ பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (11.09.2022) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிஷா பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்‌.

11.09.2022 மற்றும்‌ 12.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின்‌ மலை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

13.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

14.09.2022 மற்றும்‌ 15.09.2022: புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

Exams Daily Mobile App Download

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

11.09.2022: மன்னார்‌ வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப்பகுதுகள்‌ மற்றும்‌ இலங்கை கடற்கரை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

கேரள – கர்நாடக கடலோரப்பகுஇகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்்‌௫ழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்பகுதுகள்‌, மத்திய மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ ஆந்திர பகுதிகளில் பல காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!