தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதிக கனமழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

தென்கிழக்கு வங்க கடல்‌ வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதியில்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில்‌ நகர்ந்து 11ஆம்‌ தேதி காலை தமிழக கரையை நெருங்ககூடும்‌. இதன்காரணமாக,

09.11.2021: டெல்டா மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ஓரிரு இடங்களில்‌ அதி கன மழையும்‌, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர்‌, மதுரை, சிவகங்கை, மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சி, விழுப்புரம்‌, விருதுநகர்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

ரெட் அலர்ட், ஆரஞ்சு அலெர்ட் – வண்ணங்கள் எவ்வாறு தீர்மானம் செய்யப்படுகிறது? எதை உணர்த்துகிறது?

10.11.2021: டெல்டா மாவட்டங்கள்‌, கடலூர்‌, விழுப்புரம்‌ , புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ஓரிரு இடங்களில்‌ அதி கன மழையும்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்‌, மதுரை, அரியலூர்‌, பெரம்பலூர்‌, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, செங்கல்பட்டு, மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, சேலம்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தார்‌, திருவண்ணாமலை மற்றும்‌ கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய
மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌ .

11.11.2021: திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ஓரிரு இடங்களில்‌ அதி கன மழையும்‌, கடலூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, சேலம்‌, திருப்பூர்‌, கோயம்புத்தார்‌, நீலகிரி, திண்டுக்கல்‌ மற்றும்‌ புதுவை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிக கன மழையும்‌, டெல்டா மாவட்டங்கள்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

12.11.2021: வட கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ சேலம்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, நாமக்கல்‌, ஈரோடு மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

13.11.2021: நீலகிரி, கோயம்புத்தார்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை காரைக்கால்‌ பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழகத்தில் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் – ஐகோர்ட் உத்தரவு!

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்யக்கூடும்‌. அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ கன முதல்‌ மிக கன மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 26 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல்‌ பகுதிகள்‌:

09.11.2021 முதல்‌ 11.11.2021 வரை: தெற்கு ஆந்‌திர மற்றும்‌ தமிழக கடற்கரை பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள்‌, குமரி கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடை இடையே 6௦ கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

09.11.2021 , 10.11.2021: தென்கிழக்கு வங்கக்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை – உயர்கல்வி மாணவர்கள் கவனத்திற்கு!

10.11.2021, 11.11.2021 : தெற்கு வங்க கடல்‌ மத்‌திய பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 70 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. இதனால் மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. ஆழ்கடலில்‌ உள்ள மீனவர்கள்‌ கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

09.11.2021, 10.11.2021: மத்தியகிழக்கு அரபிக்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌ இடையிடையே 70 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

09.11.2021: தென்கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ லட்சத்‌தீவு பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. இதனால் மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. மேலும், ஆழ்கடலில்‌ உள்ள மீனவர்கள்‌ கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!