தமிழகத்தில் நவ.18 வரை கனமழை நீடிக்கும் – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் நவ.18 வரை கனமழை நீடிக்கும் - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை அறிக்கை!
தமிழகத்தில் நவ.18 வரை கனமழை நீடிக்கும் - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை அறிக்கை!
தமிழகத்தில் நவ.18 வரை கனமழை நீடிக்கும் – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை அறிக்கை!

தெற்கு கர்நாடகா மற்றும்‌ வட தமிழகம்‌ வழியாக தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ வரை (4.5 இலோ மீட்டர்‌ உயரம்‌ வரை) நிலவும்‌ காற்றின்‌ இசை மாறும்‌ பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்து சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

15.11.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் அனேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தார்‌, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, திருப்பத்தூர், வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம்‌, கரூர்‌, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

16.11.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌., ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம்‌, தர்மபுரி, நாமக்கல்‌, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்ய
வாய்ப்புள்ளது.

17.11.2021,18.11.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர்‌, விழுப்புரம்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை – எந்தெந்த இடங்களில் தெரியுமா? கலெக்டரின் அறிவிப்பு!

19.11.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌ நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல்‌ பகுதிகள்:

நேற்றைய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வடக்கு அந்தமான்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய கடற்பகுதியில் நிலவுகிறது.

15.11.2021: மன்னார்‌ வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் – அரசுக்கு கோரிக்கை!

மீனவர்கள்‌ இப்பகுதியில் எச்சரிக்கையுடன்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்படுவறொர்கள்‌.

17.11.2021,19.11.2021: மத்திய மேற்கு மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்க கடல்‌ பகுதிகள், தெற்கு ஆந்திரா மற்றும்‌ வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்

15.11.2021: கேரளா கடலோரப்‌ பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 500 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

16.11.2021,17.11.2021: கேரளா, கர்நாடகா கடலோரப்‌ பகுதிகள்‌, மத்திய கிழக்கு மற்றும்‌ தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடைஇடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!