தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று நீலகிரி, கோயமுத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய தொடர்ச்சி மலையை ஓட்டிய (திருப்பூர்,தென்காசி) மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

07.08.2021, 08.08.2021: நீலகிரி, கோயமுத்தூர்‌, தேனி, திண்டுக்கல், சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள்‌ மற்றும்‌ உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

09.08.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயமுத்தூர்‌, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழகத்தில் இணையம் மூலம் வேலை தேடுவோர் கவனத்திற்கு – சைபர் கிரைம் எச்சரிக்கை!

10.08.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகரி, கோயமுத்தூர்‌, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள்‌ கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

TN Job “FB  Group” Join Now

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பறிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

06.08.2021, 07.08.2021: தென்‌ மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ தென்‌ கிழக்கு இலங்கை பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர் வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல் பகுதிகள்:

06.08.2021 முதல்‌ 10.08.2021 வரை: தென்‌ மேற்கு, வடக்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகள் பலத்த காற்று மணிக்கு 5௦ முதல்‌ 60 கிலோமீட்டர்‌ வேகத்துடன் இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்துடன் வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!