தமிழகத்தில் இணையம் மூலம் வேலை தேடுவோர் கவனத்திற்கு – சைபர் கிரைம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இணையதளங்கள் மூலம் வேலை தேடுபவர்கள் போலியான நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என கோவை சைபர் கிரைம் காவல் துறை எச்சரித்துள்ளது. மேலும் வேலை வழங்குவதாக கூறும் நிறுவனம் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
சைபர் கிரைம் எச்சரிக்கை:
தமிழகத்தில் கடந்த வருடம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்தனர். ஊரடங்கிற்கு பிறகு வேலையில்லா திண்டாட்டம் நிலவியது. பல்வேறு நிறுவனங்கள் கொரோனாவை காரணம் காட்டி வேலை தர மறுத்தனர். இதனால் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு இணைய தளங்கள் தொடங்கப்பட்டு பணி குறித்த விவரங்களை பதிவிட்டனர். அந்த இணையதளத்தில் வேலை தேடுபவர்கள் தங்கள் முழு விவரங்களையும் பதிவிட வேண்டும்.
SBI இன்றும், நாளையும் வங்கி சேவைகள் நிறுத்தம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்த விவரங்களை பயன்படுத்தி வேலை தேடும் நபர்களை தொடர்பு கொண்டு மோசடி செய்யும் நபர்கள் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். நிறுவனங்களில் உள்ள அதிகாரிகளை போல பேசி அவர்களின் முழு தகவல்களையும் அறிந்து கொண்டு பணியில் சேர வேண்டுமென்றால் முன் பணம் செலுத்த வேண்டும் என கூறி பணம் கையாடல் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சமீப காலமாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
TN Job “FB
Group” Join Now
எனவே இணையதளங்கள் மூலம் வேலை தேடுபவர்கள் போலியான நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என கோவை சைபர் கிரைம் காவல்துறை எச்சரித்துள்ளது. தொலைபேசியில் அவர்கள் சொல்லும் நிறுவனங்களில் வேலைக்கு ஆட்கள் சேர்கிறார்களா என்பதை நேரடியாக நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும். பெரிய நிறுவனங்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கும் நபர்களிடம் இருந்து பணம் வசூலிப்பது கிடையாது. இதனை அறிந்து மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று சைபர் கிரைம் அறிவுறுத்தியுள்ளது.