தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தமிழ்நாட்டில்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று நீலகிரி, கோயம்பத்தூர்‌, வட கடலோர மாவட்டங்கள்‌, தென்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

20.08.2021: நீலகிரி, கோயம்பத்தூர்‌, தென்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

ஆகஸ்ட் 20 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – புதுவை பல்கலை அறிவிப்பு!

21.08.2021: தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌.

22.08.2021: திருச்‌ராப்பள்ளி, மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌.

TN Job “FB  Group” Join Now

23.08.2021: உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும். நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியசை ஒட்டி இருக்கும்‌

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

19.08.2021 முதல்‌ 21.08.2021 வரை: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!