தமிழக தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக கல்லூரிகளில் 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் 2022 – 2022ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. மொத்தமுள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் அதே போல பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை இணையவழியில் நடத்தப்பட்டது. இதில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு 4,7,045 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இது கடந்த ஆண்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

முதல் நாளிலேயே சுமார் 18,000க்கும் மேற்பட்டோர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்திருந்தனர். இடையில் CBSE 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது கலந்தாய்வுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் மற்ற கல்லுரிகளை தொடர்ந்து சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022க்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 23 வேலைவாய்ப்பு முகாம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download

தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர் சேர்க்கையானது வரும் ஆகஸ்ட் 25ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு பயிற்சியின்போது பாடப் புத்தகம், காலணி, சீருடை, பஸ் பாஸ், சைக்கிள் இலவசமாக வழங்கப்படும். அத்துடன் மாதந்தோறும் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!