வேளாண்மைத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் !

0
வேளாண்மைத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் !

வேளாண்மைத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணியில் உள்ளது என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைத் துறையில்:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். வேளாண் துறையில் அவர் அறிமுகப்படுத்திய திட்டங்களால் வேளாண் துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தைப் பெருக்கிட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி கூட்டுறவுக் கடன்கள் ரத்து செய்தது மற்றும் விவசாய பம்புசெட்களுக்கு இலவச மின்சாரம் முதலிய பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரூ.1,21,200/- சம்பளத்தில் வேலை வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாய துறை, வேளாண்மை துறை என அழைக்கப்பட்ட துறையின் பெயரை – வேளாண்மை-உழவர் நலத்துறை மாற்றியதுடன் பல்வேறு சிறப்பு சலுகைகளையும் வழங்கி வருகிறார். வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, 24.50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,366 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது, 270 கோடி ரூபாயில் விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டது போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது. இதனால் வேளாண்மைத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணியில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!