அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – ஜூலை 13 ஆம் தேதி முதல் தொடக்கம் !

2
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் - ஜூலை 13 ஆம் தேதி முதல் தொடக்கம் !
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் - ஜூலை 13 ஆம் தேதி முதல் தொடக்கம் !

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – ஜூலை 13 ஆம் தேதி முதல் தொடக்கம் !

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஜூலை 13 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தற்போது தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 13 ஆம் தேதி முதல் வீட்டில் பள்ளி:

அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பாடப்புத்தகங்களை வழங்கியவுடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும் எனவும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் தோறும் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10ம் வகுப்பு மாணவர்கள் என மாவட்டத்திற்கு சிலர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.

பள்ளி கல்லூரிகள் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை திறப்பில்லை

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. மக்களின் நிலையை அறிந்து மக்களுக்காக செயல்பட வேண்டும் அரசு.

  2. Without making adequate infrastructure in all areas this idea may not serve the desired purpose at all! All theories cannot be practiced!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!