தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது குறைப்பு?தலைமை செயலாளரிடம் கோரிக்கை!!

40
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது குறைப்பு?தலைமை செயலாளரிடம் கோரிக்கை!!
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது குறைப்பு?தலைமை செயலாளரிடம் கோரிக்கை!!
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது குறைப்பு?தலைமை செயலாளரிடம் கோரிக்கை!!

இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழக அரசு, அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதினை 60 ஆக உயர்த்தியது. இந்நிலையில் தற்போது இதனை குறைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வெளிவரும் வண்ணம் இருந்து வருகிறது.

ஓய்வு பெரும் வயது:

இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது 58 ஆக இருந்து வருகிறது. இந்நிலையில் இதனை தமிழகத்தில் உயர்த்தப்பட்டது. அதன்படி இதற்கு முன்னதாக தமிழகத்தில் ஆட்சி புரிந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அரசு, ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதினை 58ல் இருந்து 59 ஆக உயர்த்தியது. இதனை தொடர்ந்து மீண்டும் ஓய்வு பெரும் வயதினை உயர்த்தி 60 ஆக நிர்ணயித்தது. இதற்கு பலவேறு ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் இருந்து வந்தன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதினை முன்பு போல் 58 ஆக மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சங்கத்தின் தலைவரான சோமசுந்தரம், செயலர் முகேஷ் ஆகியோர் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றினை அனுப்பியுள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது, ஓய்வு பெரும் வயது உயர்வு காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

பதவி உயர்வு தேக்க காரணத்தினால் அரசு ஊழியர்களின் பதவி உயர்வு பறிபோகி உள்ளதால் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 60 வயது ஓய்வு என்ற உத்தரவினை தொடர்ந்து 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய ஊழியர்கள் மொத்தமாக அடுத்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளனர். இதனால் தமிழக அரசிற்கு கடும் நிதிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஓய்வு வயது நீட்டிப்பு காரணமாக அவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதிய பலன்களை விட ஊதியம் அதிக அளவில் இருக்கும். எனவே ஓய்வு பெரும் வயதினை மீண்டும் 58 ஆக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

40 COMMENTS

  1. அனுபவமிக்க அரசு அலுவலர்கள் குறைந்து போவார்கள். அத்துடன் இந்த கரோனா காலத்தில் வயது குறைத்து செயல் படுத்தினால் அரசுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படும்.

    • வயது முதுமை காரணமாக சரியாக பணி நடைபெறாது.இளைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

    • Sorry I disagree. We were also newone when we joined and we have learnt the work in a shoter period. We have enjoyed a comfortable life, let us pave way for youngsters. They are very sherewd and tech oriented and they will learn the work without any difficulties. 58 is enough. 58 or 30 years of service which ever is earlier.

    • இளைஞர்களின் வேலை வாய்ப்பு கருத்தில் கொண்டு வயது வரம்பு 58 aga குறைக்க வேண்டும் employment Office பணிக்காக இது வரை தோராயமாக 50 லட்சம் பேர் உள்ளனர் இவர்களின் நலன் கருதி வயது வரம்பு குறைக்க வேண்டும்

      • Having young talented graduates without job, it is absolutely unwanted to raise the age of retirement… immediate actions must be taken to reduce age of retirement..to reduce unemployment and to reduce govt finance burdens…

  2. விருப்பம் இருந்தால் பணி ஓய்வு பெற்று கொள்ள ஒரு வாய்ப்பு தந்திருக்க வேண்டும். அதனால் குடும்ப சூழ்நிலை, வயது காரணமாக இயலாமை, கொரோன காலத்தில் அத்யாவசிய பணி என்ற பேரில் work from home வாய்ப்பும் இல்லாமல் இந்த 60 வயதில் என் கணவர் தினமும் ஆபீஸ் போவது என் போன்றோருக்கு எவ்வளவு கவலை யளிக்கிறது தெரியுமா? “விருப்பம் இருந்தால் “என்ற ஒரு வார்த்தை இருந்து இருந்தால் அடுத்த மே மாதம் வரை நாங்கள் காத்திருக்க வேண்டாமே. இதையும் தலைமை செயலிரிடம் தயவு செய்து தெரிவியுங்கள்.

  3. அரசின் இத்தகைய உத்தரவால் பெரிதும் பாதிக்கப் படக் கூடியது இளைஞர்களே எனவே பணியினை தேடி அலையும் இளைஞர்களில் வாழ்வில் மண்ணள்ளி போடாமல் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக குறைத்திட முதல்வர் அவர்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  4. 58 age limit please think new posting basic low but old posting salary 4 new posting please understand government last government fool to people

    • Sir, As far as the present economic and social conditions of unemployed are concerned , the retirement age must be reduced to 58 or 30 years of service whichever is earlier. Besides, one can not work peacefully over the age of 55 years, because most people are suffering from Blood pressure, Sugar, Cancer and many non communicable diseases alongwith infectious diseases. So ,Govt should take action on warfooting to solve the problems of both Employed as well as unemployed youths

    • 58 வயது அல்லது 33ஆண்டு பணிக்காலம் முடித்தவர்களுக்கு அகவை முதிர்வு ஓய்வு வழங்கி ஆணையிட்டால் பணியில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது,புதிதாக வேலை வாய்ப்பு அளிப்பதாலும் அரசுக்கு அதிக நிதிச்சுமை இருக்காது .

      • Retirement age may be fixed as 55 or 30 years of service. Thereafter, there should not be any condition to continue their services with the discretion of govt. Employees. At the same time, they have to submit their asset details to get pension.

  5. Better reduce the retirement age to 55. That is enough. Our new government will switch over to old pension scheme. The staff will not be affected. This will boost the employment opportunities for youngsters.

  6. The year 2020 may is extended for two years. So the retirement starts from May 2022 the person will retire in his turn (month the person due to retire during 2021(58)will start retire from 2023 hence money require month wise however the pension and the benefits will be more increments payhike for two years

  7. லட்சக்கணக்கான பட்டதாரிகள் பொறியியல் ஆசிரியர்கள் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்
    எனவே,காலத்திற்கு தக்கபடி அரசு பணியில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
    அதாவது அரசு பணி என்பது இருபது வருடங்கள் அல்லது அறுபது வயது இதில் எது முதலில் வருகிறதோ அந்த தேதியில் அரசு பணியில் இருந்து விடுவித்து விட வேண்டும் என சட்டம் போடவேண்டும். இவ்வாறு செய்ய மாநில அரசு க்கு அதிகாரம் உள்ளது
    இதன் மூலம் பத்து ஆண்டுகள் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் ஆக பணி புரிந்து ஓய்வு பெற முடியும்
    அரசு பணியில் இருந்து வெளிவரும் ஓய்வு பெற்ற வர்கள் பணம் புழக்கத்தில் வந்து தொழில்களை சிறப்பாக நடத்த முடியும். மக்கள் இடம் வங்கி கள் இடம் கடன் வாங்கி தொழில்களை நடத்த வேண்டாம்.

  8. There are lakh and lakhs of educated guys are waiting for job for many years….. What is the need of increasing age limit !!! If possible the government can reduce the age 55.

  9. Please consider the younger generation.Moreover you can’t expect much from the 57 & 58 aged people. They become weak at this age. Why to waste the bubbly potential of the youngsters.!! I hope government will seriously look into this matter & pave way for the youngsters who have a long way to go & get settled in life.

  10. It is better to reduce the retirement age as 58 so that young educated will get the job as promised by the new Government

  11. இப்போது வேலை கிடைப்பதே 40 வயதுக்கு மேல்தான் எனவே 30 வருட சர்வீஸ் முடித்தவர்கள் விருப்ப ஒய்வு பெறலாம் என்றால் நலமாக இருக்கும் இதில் யாருக்கும் கஸ்டம் வருவதில்லை வேலை கிடைக்காதவர்களுக்கும் வேலை கிடைக்க வாய்ப்பாக இருக்கும் அரசுக்கும் பணலாபம் சாலமோன் ஜெயராஜ் நெல்லை

  12. Please redeuse the retirement age 60 to 55. Qualified youngsters are waiting for job. If there is no other source of income to the retiring employee’s family, it will be consider for give an opportunity to the son or daughter of that employee for a job if they are qualified.

  13. r தமிழக அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆகக் குறைப்பது ! முந்தைய அதிமுக பொறுக்கிகள் குதிச் சுமையிலிருந்து தற்காலிகமாக தப்பிப்பதற்காக செய்த காரியம் தான் ஓய்வு பெறும் வயதை குறைத்தது ! ஒரு கல்லூரி ஆசிரியர் மாதம் 2 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுகிறார் . எத்தனையோ PhD , NET முடித்த நாற்பது வயதைக் கடந்தோர் எந்த வேலையும் கிட்டாமல பட்டினி கிடக்கிறார்கள் . ஒரு கல்லூரி ஆசிரியரின் ஊதியத்தில் எட்டு கெளரவ பேராசிரியர்களை நியமிக்க இயலும் . ஓய்வு பெறுவோர்க்கு பணிக கொடைகளை ஒவ்வொரு ஆண்டும் நான்கில் ஒரு பங்காக செலுத்தி வரலாம் . இதனால் லட்சோப லட்ச இளைய Bread winners ஐ உருவாக்கலாம் . Dec 31க்குள் முறையான தேர்வுகளை நடத்தி புதிய பணியாளர்களை தெரிவு செய்யலாம் . ஆறு லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிட்டும் . வயது முதியவர்களால் எங்கும் அரசுப் பணி முறையாக நடை பெறவில்லை . July 31க்குள் இந்த மக்களாட்சி அமல் படுத்துமா ?

  14. முதலில் ஓய்வு வயதை 59 ஆக குறைக்கலாம். சில மாதங்கள் கடந்த பின் 58 ஆக குறைக்க வேண்டும். இரண்டும் முடிந்ததும் ஓய்வு பெற 33 வருட பணி / 58 வயது என்பதை கட்டாயமாக்கலாம். இதன் மூலம் தற்போதைய அரசின் கடன் சுமையை ( 5.70 லட்சம் கோடிகள் )சமாளித்து, பணியில் இருப்பவர்களும் பாதிப்பின்றி, இளைஞர்கள் பெருமளவில் வேலை வாய்ப்பு பெற்று பலனடைவார்கள். 58 க்கு பின் யாருக்கும் பணி நீட்டிப்பை தடை செய்ய வேண்டும்.

  15. The matters as said above are perpectly correct I recommend kalainger pollovy of the age of 58 is good for govt as as the public

  16. CM Sir.
    Reduce the age of retirement to 58. We have lot of health issues.
    We can live comfortably with pension. But youngsters need a decent job to settle down in their life.
    Send us out and open the opportunity for the new entrants.

    • மாண்புமிகு முதல்வர்
      முதிர்வு வயது55ஆகவும் அல்லது பணிக்காலம்33 ஆண்டாகவும் குறைத்து இளைய சமூகத்தினருக்குவாய்ப்பு அளிக்கலாம்

  17. Yes, Retairment Age Reduced Govt Employee’s Age 58 or 33 Year Service , Because lot of youngsters Unopportunities , he is getting chance Reduce Age Limit,
    Two sujes
    1.Retairment Age Limit 55 or 30Years Service.
    2.One family one person only Govt Employee.

  18. எவ்வளவோ பேர் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிரார்கள். இது தேவைதானா? வயதானவர்களை ரெஸ்ட் எடுக்க அனுப்பலாம். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமா இந்த அரசு?

  19. இளைய தலைமுறை அரசு வேலை பெற வேண்டும் அதனால் வயது வரம்பு 58 பண்ண வேண்டும்

  20. தமிழக அரசு கொண்டு வர இருக்கும் அரிசி திட்டத்தை விட 58 வயது பணியாளர்களுக்கு ஓய்வு கொடுத்து ஓய்வூதியம் வழங்குவது இளைஞர்களுக்கு கொடுக்கும் வாழ்க்கை எனும் தமிழக பரிசு சீட்டு

  21. தமிழக அரசு ஊழியர்களுக்கு, ஓய்வு பெறும் வயதினை 60 ஆக உயர்த்தியது மிகவும் வரவேற்கத்தக்க நல்ல ஆரோக்கியமான முடிவே ஆகும். ஆகவே, எக்காரணம் கொண்டும் இன்றைய புனிதமிகு தமிழக அரசு இதனைக் குறைந்திடும் முடிவினை உடன் கைவிட வேண்டும். விருப்பம் இல்லாத அரசு ஊழியர்கள் வி. ஆர். எஸ் பெறுவதை ஏற்க வேண்டும்.

  22. 30years service or 60 years age which is first they may get retirement because government job get 30 to 40 years of youth then He get only 30 to 20 years service in that time

  23. மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெறும வயது 60 ஆக உள்ளது சம்பளம் மட்டும் மத்திய அரசுக்கு இணையாக வேண்டும் ஓய்வு பெறும் வயது மட்டும் கூடாதா

  24. “பழையன கழிதலும் புதியன புகுதலும்
    வழுவல கால வகையினானே”
    நம் முப்பாட்டன் தொல்காப்பியன்
    நமக்கு விட்டுச்சென்ற கோட்பாடு.
    கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல
    மனிதனின் ஆயுட்காலமும் அறிவுத்திறனும்
    உடல்திறனும் மாறிவருவது உண்மை.
    சிலர்வாழ பலர்வாடும் நிலைமை கொடுமை.மாற்றத்தைக் கொண்டுவந்து
    மாநிலத்தைச் செழிக்கச்செய்வோம்.
    ஒளிபடைத்த கண்ணினாய் வா!வா!
    உறுதி கொண்ட நெஞ்சினாய் வா!வா!
    என்ற பாரதியின் கூக்குரலை மனதில்
    கொண்டு துறைதோறும் துறைதோறும்
    புத்தொளிபரவ வழிவகை செய்வோம்.
    மக்கள்தொண்டே மகேசன்தொண்டு
    என்றுணர்ந்து செயலாற்றும் செயல்வீரர்களைக் கண்டுணர்ந்து
    பணியளிப்போம்.நேர்மையும்
    உண்மையும் மனதில்கொண்டு
    உழைப்பாய் உழைத்த இளைஞர்களின்
    பணிவாய்ப்பை சில ஊழல் பெருச்சாலிகள்
    தின்று தீர்த்ததற்கு
    முற்றுப்புள்ளி வைப்போம்.

    அகவை குறைப்போம்.அரசுபணி
    அனைவருக்கும் பகிர்வோம்!
    .

  25. Retirement age 60 revision to 58 will affect many having crossed 58, financially Government will not face difficulties, the best option is to follow Central Government service rules of optional VRS and retirement on comp
    letion of 30 years or 60 years which ever early

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!