தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மும்முரம் – பெற்றோர்கள் ஆர்வம்!
தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதுவரை 11-ம் வகுப்பில் ஒரே நாளில் 904 பேர் சேர்ந்துள்ளனர் என மாவட்ட அரசு பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது. மேலும் பெற்றோர்கள் அரசுப்பள்ளிகளை ஆர்வமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆனால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 2021-22ம் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. அதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக 1, 6, 9, 11 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. மேலும் மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – EMIS இணையதளம்!
கடந்த 2 வருடங்களாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் குறையாத மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. 6, 9-ம் வகுப்புகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் முன்னதாக தாங்கள் படித்த பள்ளிகளில் இருந்து மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொண்டு, புதிதாக பள்ளிகளுக்கு பெற்றோருடன் வந்து சேர்ந்து வருகின்றனர். மேலும் 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
TN Job “FB
Group” Join Now
இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6- ம் வகுப்பில் 267 மாணவ-மாணவிகளும், 9-ம் வகுப்பில் 31 பேரும், 11ம் வகுப்பில் 904 பேரும் சேர்ந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டால் பள்ளிகளில் இன்னும் மாணவர் சேர்க்கை உயரும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் நலத்திட்டங்களும், அரசு அறிவிக்கும் சலுகைகளும் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க காரணமாக உள்ளது எனவும் கூறுகின்றனர்.