தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்களில் புதிய வசதி – பதிவுத்துறை ஜிஜி அறிவிப்பு!!

0
தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்களில் புதிய வசதி - பதிவுத்துறை ஜிஜி அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்களில் புதிய வசதி - பதிவுத்துறை ஜிஜி அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்களில் புதிய வசதி – பதிவுத்துறை ஜிஜி அறிவிப்பு!!

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள 151 இ-சேவை மையங்களில் சொத்து வரி, மின்கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களை செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது கூடுதலாக வில்லங்கச்சான்றிதழ் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவுத்துறை ஜிஜி தெரிவித்துள்ளார்.

இ-சேவை மையம்

அரசு துறைகளிலிருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு சேவைகள் மின்னனு சேவையாக பொதுமக்களுக்கு அருகிலுள்ள பொதுசேவை மையம் வழியாக தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் இ-சேவை பயன்பாட்டினால் வழங்கப்படுகிறது. அரசு இ – சேவை மையங்களில், வருவாய் மற்றும் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவை இணையதள சேவை வாயிலாக வழங்கப்படுகின்றன.

ஆகஸ்ட் 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!

அதுமட்டுமில்லாமல் விவசாய வருமானச் சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், இயற்கை இடர்பாடுகளால் இழந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், ஆண்குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், அடகு வணிகள் உரிமம், கடன் கொடுப்போர் உரிமம் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் வகுப்பு சான்றிதழ் ஆகிய 15 வகையான சான்றிதழ்கள், மின்னாளுமை திட்டத்தில், இ – சேவை மையங்கள் வழியாக வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு – வாகன வரி செலுத்த கால அவகாசம்!

மேலும் இ சேவை மையங்கள் மூலமாக நில உரிமை விவரங்களான பட்டா, புலப்படம், சிட்டா, நகர நில அளவை பதிவேடு ஆகியவற்றை பார்வையிட, அ-பதிவேடு விவரங்களை பார்வையிட, நில உரிமை விவரங்களை சரிபார்க்க, அரசு புறம்போக்கு நில விவரங்களை பார்வையிடுதல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். தற்போது புதிதாக நிலங்களுக்கு வில்லங்கச்சான்றிதழ் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை ஜிஜி தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!