சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு – இன்றைய நிலவரம்!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு – இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை நிலவரம்:

தமிழகத்தில் கடந்த வருடம் பரவ தொடங்கிய கொரோனா நோய்த்தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு புறம் வசதி படைத்தவர்கள் பொதுமுடக்க காலத்தில் அதிகளவில் முதலீடு செய்து வந்தனர். இதனால் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு தொடர் உயர்வை கண்டு வந்தது. மற்றொரு புறம் சாமானிய மக்கள் கொரோனாவால் வேலைகளை இழந்து சிரமப்படும் நேரத்தில் தங்கம் விலை அதிகரிப்பால் நகை வாங்க முடியாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர்.

Wipro நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – விண்ணப்பம், தகுதி, தேர்வு செயல்முறை வெளியீடு!

சர்வதேச சந்தையை பொறுத்து தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்ற வாரம் முழுவதும் சரிந்து வந்த தங்கம் இந்த வார தொடக்கத்தில் இருந்து விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448 உயர்ந்து ஓரு சவரன் ரூ.35,136க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் Google Apps இனி இயங்காது – அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதனால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.35,096க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,387க்கும் விற்பனையாகிறது. அதேபோல் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here