தமிழகத்தில் முழு ஊரடங்கு & ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் கவனத்திற்கு – டிஜிபி முக்கிய அறிக்கை!

4
தமிழகத்தில் முழு ஊரடங்கு & ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் கவனத்திற்கு - டிஜிபி முக்கிய அறிக்கை!
தமிழகத்தில் முழு ஊரடங்கு & ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் கவனத்திற்கு - டிஜிபி முக்கிய அறிக்கை!
தமிழகத்தில் முழு ஊரடங்கு & ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் கவனத்திற்கு – டிஜிபி முக்கிய அறிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவல்துறையினருக்கு முக்கிய அறிக்கை ஒன்றை சென்னை நகர டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் வெளியிட்டுள்ளார்.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் 3ம் அலை வேகமெடுத்து வருகிறது. அத்துடன் ஓமைக்ரான் வைரஸ் பரவலும் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வார இறுதி நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு வருகிற ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளிவர வேண்டும்.

தமிழ்நாடு காவல்துறையில் 450 உதவி ஆய்வாளர் உட்பட 10000 காலிப்பணியிடங்கள் – விரைவில் அறிவிப்பு!

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்பதால் திரையரங்கம், பார், பப், விளையாட்டு மைதானம், மால் உள்ளிட்டவை முழுவதுமாக மூடப்படும். இதையடுத்து பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து உள்ளிட்டவை இயங்காது. ஆனால் அத்தியாவசிய கடைகளான மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் உள்ளிட்டவை வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் வெளியூர் சென்று திரும்பும் பயணிகளுக்கு ஆட்டோ,டாக்சிகள் கிடைக்காமல் மிகவும் அவதியுறுகின்றனர்.

தமிழகத்தில் அரசு வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு – காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு!

அத்துடன் ஆட்டோ, டாக்சிகள் கிடைத்தாலும் அதிக கட்டணங்களை வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதனை கட்டுப்படுத்த சென்னை நகர டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் ஊரடங்கு காலத்தில் வெளியூர் சென்று திரும்பும் பயணிகளுக்கு ஆட்டோ, டாக்சிகளில் அனுமதிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் இதனை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. யார் என்ன எச்சரிக்கை செய்தாலும் ஆட்டோக்காரர்களின் கட்டணக் கொள்ளையை ஒழிக்க முடியாது சென்னையில்.

  2. Apudi sollura government yen petrol diesel rate yethuringha. manam ketta government. Unghaluku monthly salary varum nangha yenna panrathu. ithula GST vera 😠

  3. ரயில் டிக்கெட் இருந்தாலும் 300 பைன் போடுகிறார்கள், பயணிகள் இருக்கும் போது பைன் போட்டாலும் அவர்களிடம் வாங்கி விடலாம் இறக்கிவிட்டு வரும் பொழுது யாரிடம் வாங்குவது,

  4. ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் ஏன் வாங்குகிறார்கள் என்று யாரும் ஆராய்வதேயில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!