தமிழக மின்வாரியம் முக்கிய அறிவிப்பு – மே மாத கட்டணம் செலுத்துதல்!
மின் நுகர்வோர்கள் தங்கள் மின் மீட்டரின் ரீடிங் அளவீட்டை புகைப்படம் எடுத்து அந்த பகுதியில் உள்ள உதவி செயற்பொறியாளர் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும் என கோவை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அறிவித்து உள்ளார்.
மின்கட்டணம் வசூல்:
தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் வீடுகளுக்கு நேரடியாக வந்து கணக்கெடுத்து குறித்துக் கொள்வார். அதனடிப்படையில் நுகர்வோர் மின் கட்டணத்தை நேராக அலுவலகத்தில் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்துவார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் மின் கட்டணம் கணக்கீடு செய்யவில்லை. அதற்கு பதிலாக மூன்று சலுகைகள் மின் நுகர்வோருக்கு வழங்கப்பட்டது.
தமிழகம் வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் – டிஎஸ்பி உத்தரவு!
கடந்த வருடம் மே மாத தொகையை இம்மாதம் செலுத்தலாம் அல்லது இந்த வருடம் மார்ச் மாத தொகையை மே மாத கட்டணமாக செலுத்துவது அல்லது வீட்டின் மின் மீட்டரை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் மின் வாரியத்திற்கு அனுப்பி அதற்கேற்ற கட்டணம் கணக்கிட்டு செலுத்தலாம் என்ற சலுகைகளை தமிழ்நாடு மின்வாரியம் அளித்தது. இந்த முறையில் மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து அனுப்பியும் மக்களுக்கு இதுவரை மின் கட்டணம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என புகார்கள் எழுந்தது.
TN Job “FB
Group” Join Now
தற்போது கோவை இந்த மாதம் முதல் நடப்பு கணக்கீட்டின் படி கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. கோவை தெற்கு, வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் தங்கள் வீட்டின் பத்து இலக்க மின் இணைப்பு எண், மின் மீட்டரின் ரீடிங் அளவீட்டை மொபைல் போனில் புகைப்படம் எடுத்து அந்த பகுதி உதவி செயற்பொறியாளர் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இந்த மாதம் முதல் நீங்கள் பயன்படுத்தும் மின் அளவு கணக்கீடு செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என கோவை செயற்பொறியாளர் ஸ்டாலின் பாபு தெரிவித்துள்ளார்.
இந்த முறையில் அதிகமான தொகையை கட்டவேண்டுடி வரும். காரணம் 60 நாட்கள் கழித்து ரீடிங் எடுப்பது வழக்கம் நீங்கள் 59 நாட்களில் அனுப்பினால் தவறில்லை மாறாக 75 நாட்களில் அனுப்பினால் 500 யுனிட்டிற்கு மேல் வரும் அதனால் இந்த முறையில் அதிகமான தொகையை கட்டவேண்டுடி வரும்.
We have problem in our house 560units 2186rs
Reason:
Late reading 70 days
சென்னையில் எங்கள் area வில் மீட்டர் reading WhatsApp இல் அனுப்பிய 10 வது நிமிடத்தில் செலுத்த வேண்டிய கட்டணம் வந்தது நேற்று. உடனே ஆன்லைன் இல் பணம் செலுத்தி விட்டோம். இது June மாத ம் உள்ள மின்சார கட்டணம்
நாகை மாவட்டம் வாய்மேடு (எங்கள் பகுதி)துணைமின் நிலையபிரிவுக்கு meter reading whatsupல் அனுப்பிய மறுநாளே கட்டணத்தொகையை (ஜூன் மாதத்திற்கு எடுக்க வேண்டிய அளவீடு) போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டார்கள்…