பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சந்திப்பு!!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது சில முக்கிய திட்டங்கள் குறித்தும், நீட் தேர்வு, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை உள்ளிட்ட சில ஆலோசனைகளை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வர் சந்திப்பு
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பதவியேற்ற பிற்பாடு முதலாவது அரசு முறை பயணமாக தலைநகர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி, காலை 10 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்ட அவர், டெல்லியை சென்றடைந்தார். இந்த அரசு முறை பயணத்தில் முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், திமுக எம்பி பாலு, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஜூன் 21ம் தேதிக்கு பின் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள்? மாநில அரசிடம் பரிந்துரை!
செல்லி சென்று முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் கட்டப்படும் திமுக அலுவல பணிகளை பார்வையிட்டார். பின்னர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற அவருக்கு காவல்துறை அணிவகுப்புடன், மரியாதையை செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சில முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
TN Job “FB
Group” Join Now
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டங்கள், நீட் தேர்வு ரத்து, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை உள்ளிட்டவற்றை முன்வைத்து கோரி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட சிலர் பங்குபெற்றனர். சுமார் 25 நிமிடம் நடைபெற்ற இந்த ஆலோசனை முடிவுக்கு வந்துள்ளது.