‘வாடிக்கையாளர்களை நல்ல முறையில் நடத்தவும்’ – SBI அதிகாரிகளுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

0
'வாடிக்கையாளர்களை நல்ல முறையில் நடத்தவும்' - SBI அதிகாரிகளுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!
'வாடிக்கையாளர்களை நல்ல முறையில் நடத்தவும்' - SBI அதிகாரிகளுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!
‘வாடிக்கையாளர்களை நல்ல முறையில் நடத்தவும்’ – SBI அதிகாரிகளுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

முத்திரைத்தாள் கொள்முதலுக்கு செலுத்தப்படும் தொகைக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதே போல் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி உள்ளது.

நீதிபதி உத்தரவு:

மக்களின் பண தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக இருப்பது வங்கிகள். அரசின் அங்கீகாரம் பெற்ற முன்னணி வங்கிகளில் ஒன்று எஸ்.பி.ஐ வங்கி. இந்த வங்கி மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனி நபர் கடன், கல்வி கடன், நகை கடன் என பல வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் முத்திரைத்தாள் வாங்குவது விற்பது போன்ற சேவைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முத்திரைத்தாள் வாங்குவதற்காக, முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், அரசுக்கு செலுத்தும் தொகைக்கு, பணம் கையாள்வதற்கான கட்டணம் வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கியான எஸ்.பி.ஐ. க்கு தடை விதிக்க கோரி முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் வழக்கு தொடரப்பட்டது.

தேசிய வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் – ரூ.47.16 கோடி ரூபாய் விடுவிப்பு!

இந்த வழக்கானது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையில் விசாரணைக்கு வந்தது. முத்திரைத்தாள் வாங்குவதற்காக அரசு கருவூலத்துக்கு செலுத்தப்படும் தொகைக்கு பணம் கையாள்வதற்கான கட்டணத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கருவூல இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ள போதிலும், அதற்கு பதிலளிக்காத எஸ்.பி.ஐ. அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அரசு அதிகாரிகளின் கடிதங்களுக்கு மதிப்பளித்து பதிலளிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து இந்த வழக்கில் எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் வேறு வங்கிகளில் கணக்கு துவங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியதற்கும் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பொறுப்பற்ற முறையில் ஆணவத்துடன் நீதிமன்றத்துக்கு பதிலளித்த சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் வாடிக்கையாளர்கள், குடிமக்களின் பரிவர்த்தனைகள் மூலம் ஊதியம் பெறும் வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்களை நல்ல முறையில், கவுரவமாக நடத்தும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த எஸ்.பி.ஐ. பொது மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முதல் பருவத் தேர்வுக்கான நடைமுறைகள் வெளியீடு!

ரிசர்வ் வங்கி உத்தரவில் அரசுடனான பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என கூறாததால், முத்திரைத்தாள் கொள்முதலுக்காக செலுத்தப்படும் தொகைக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவையும், இது சம்பந்தமான சுற்றறிக்கையும் அனைத்து கிளைகளுக்கும் அனுப்ப எஸ்.பி.ஐ. வங்கியின் பொது மேலாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!