தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு சூப்பர் திட்டம் – சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி!

0
தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு சூப்பர் திட்டம்
தமிழகத்தில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக புதிய திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

புதிய திட்டங்கள்:

தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களுக்குமான நலத்திட்டங்களை பார்த்து கவனித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அந்த வகையில் திமுக ஆட்சி வந்த பின்னர் முதியவர்களுக்கு அதிகம் பலன் அளித்த மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் மிகவும் வரவேற்பு பெற்றது. இத்திட்டத்தின் வாயிலாக தற்போது 1.6 கோடிக்கும் அதிகமான மக்கள் பலனடைந்து வருகின்றனர். குறிப்பாக  நான்கு கோடிக்கும் அதிகமான மக்கள் பலமுறை சேவைகளை பெற்றுள்ளதாகவும் அறிக்கையின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள இத்திட்டத்தின் அடுத்த இலக்கு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை கவனம் செலுத்துவதாகும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்படி “தொழிலாளரை தேடி மருத்துவம்” என்ற திட்டத்தை அரசு விரைவில் தொடங்கி செயல்படுத்தும் என்று உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!