சன் டிவி “சித்தி 2” சீரியல் வெண்பாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் வாழ்த்து!

0
சன் டிவி
சன் டிவி "சித்தி 2" சீரியல் வெண்பாவின் சினிமா பயணம் - ரசிகர்கள் வாழ்த்து!
சன் டிவி “சித்தி 2” சீரியல் வெண்பாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் வாழ்த்து!

சன் டிவியில் 90’ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான சித்தி சீரியலின் தொடர்ச்சியாக அதன் 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் வெண்பாவாக நடிக்கும் ப்ரீத்தி ஷர்மாவின் சினிமா பயணம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை ப்ரீத்தி ஷர்மா:

சன் டிவி சீரியல்களில் ஒன்றான சித்தி 2 இல் வெண்பாவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா. அவரின் சொந்த ஊர் லக்னோ. ஆனால் தற்போது கோயம்புத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் முதன்முதலில் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டாராம். 1 ஆம் வகுப்பு முடிக்கும் தருவாயில் கட்டதுரைக்குக் கட்டம் சரியில்ல என்ற டெலி ஃபிலிம் மூலம் நடிக்க தொடங்கி அதன் பின், மாடலிங் செய்ய துவங்கி இருக்கிறார். அதன் பின் கல்லூரி படிக்கும் போது ‘எங்க போன ராசா’ என்ற வெப் சீரிஸில் நடித்தார்.

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகர் கார்த்தி – ரசிகர்கள் உற்சாகம்!

அதில் அவரது நடிப்பு திறமை பலரால் பாராட்டப்பட்டது. அதன் பின் அவருக்கு சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதன்முதலில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் அனிதாவாக அறிமுகமானார். இதில் நவீனை காதலிக்கும் கல்லூரி பெண்ணாக, ஜனனிக்கு தங்கையாக நடித்திருப்பார். நெட்டிசன்கள் மத்தியில் நவீன் – அனிதா ஜோடி பிரபலமாகியது. இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. தொடர்ந்து இருவரும் டிக் டாக்கில் ஜோடியாக கலக்கினர். இருவரும் காதலிப்பதாக கிசுகிசுப்புகள் வந்தது.

கர்பத்துடன் நடனம் ஆடும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் – கஸ்தூரியுடன் வெளியான வீடியோ!

ஆனால் தற்போது நவீனுக்கு சின்னத்திரை நடிகையுடன் நிச்சயதார்த்தமே முடிந்து விட்டது. இந்நிலையில் சன் டிவி சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்ததது. அதில் ராதிகாவின் வளர்ப்பு மகளாக நடித்து வந்தார். ஆனால் இந்த சீரியலில் இருந்து ராதிகா விலக அடுத்து நடிக்கலாமா? வேண்டாமா? என குழப்பத்தில் இருந்தாராம். ஆனால் தற்போது மொத்த சீரியலையும் தாங்கி நிற்கும் தூண் போல் வெண்பா கதாபாத்திரம் மாற்றப்பட்டது. அதன் பின் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். மேலும் கருணாஸ் மகன் கென் உடன் இணைந்து வெட்டி எடுத்து கட்டிக்கோ என்ற பாடலில் நடனம் ஆடி புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!