தமிழகத்தில் தற்கொலை விகிதம் உயர்வு – நிபுணர்கள் தகவல் !!

0
தமிழகத்தில் தற்கொலை விகிதம் உயர்வு - நிபுணர்கள் தகவல் !!
தமிழகத்தில் தற்கொலை விகிதம் உயர்வு - நிபுணர்கள் தகவல் !!
தமிழகத்தில் தற்கொலை விகிதம் உயர்வு – நிபுணர்கள் தகவல் !!

தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் தற்கொலை வீதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 9 மாவட்டங்களில் இதுவரை 1300 தற்கொலைகள் பதிவாகி இருப்பதாக மத்திய மண்டல காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை அதிகரிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏராளமான உயிர்கள் பறி போனது. மேலும் இந்த ஊரடங்கால் ஏழை மக்கள் உணவின்றி சிரமப்படுகின்றனர். நடுத்தர வர்க்கத்தினரும் வறுமையால் வாடுகின்றனர். நாடே பெரும் சவாலை சந்தித்து வருகிறது. தற்போது அதிக அளவில் தற்கொலைகள் அரங்கேறி வருகிறது. தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் அதிக தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஊரடங்கு காலத்தில் ஏராளமாக நபர்கள் தனிமையை உணருகின்றனர்.

கருணை அடிப்படையில் பணி வரன்முறை நடவடிக்கை – வருவாய்த்துறை செயலர் உத்தரவு!

மேலும் இந்த ஊரடங்கால் இளைஞர்கள் வேலையின்மை காரணத்தால் சமூகத்தில் வாழ முடியாது என்று கருதி மனதளவில் பாதிக்கப்பட்டு தற்கொலை தான் தீர்வு என்ற எண்ணத்திற்கு செல்கின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் வறுமை, வேலையின்மை, தனிமை உணர்வு போன்ற சூழ்நிலைகளை கையாள தெரியாமல் தற்கொலை செய்கின்றனர் என நிபுணர்கள் கூறுகின்றனர். நாட்டில் முதல் அரையாண்டில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சுமார் 1300 தற்கொலைகள் பதிவாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

திருச்சியில் கிராம பகுதியில் மட்டும் 342 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது. குடும்ப பிரச்சனை மட்டும் இந்த கொரோனாவால் ஏற்பட்ட உடல்நல கோளாறுகள் தற்கொலைக்கு காரணங்களாக கூறப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகளில் 40 தில் 4 பேர் மன அழுத்தத்தால் தற்கொலை எண்ணத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது நகர பகுதிகளில் அதிகமாக பதிவாகியுள்ளது. மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள் சுகாதார அவசர உதவி எண் 044-24640050 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!