டிச.16, 17 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் – முக்கிய அறிவிப்பு!

0
டிச.16, 17 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் - முக்கிய அறிவிப்பு!
டிச.16, 17 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் - முக்கிய அறிவிப்பு!
டிச.16, 17 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் – முக்கிய அறிவிப்பு!

2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனை எதிர்த்து வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

வேலை நிறுத்தம்:

பொதுத்துறை வங்கிகளில் பல்வேறு கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. தனிநபர் கடன், விவசாய கடன், கல்விக் கடன், தொழில் கடன் என பல வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பலர் பயனடைந்து வருகின்றனர். அத்தகைய வங்கிகளில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆண்டு வருமான உச்ச வரம்பு உயர்வு!

தற்போது நாடு முழுவதும் பல்வேறு அரசு மற்றும் தனியார் வங்கிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021, நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என பலரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் நாளை (டிச.2) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்நிலையில் வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த முடிவு கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here