ஆதார் மையம் அமைக்க திட்டமா? கவனிக்க வேண்டிய சில முக்கிய விவரங்கள் இதோ!

0
ஆதார் மையம் அமைக்க திட்டமா? கவனிக்க வேண்டிய சில முக்கிய விவரங்கள் இதோ!
ஆதார் மையம் அமைக்க திட்டமா? கவனிக்க வேண்டிய சில முக்கிய விவரங்கள் இதோ!
ஆதார் மையம் அமைக்க திட்டமா? கவனிக்க வேண்டிய சில முக்கிய விவரங்கள் இதோ!

மத்திய அரசின் அறிவிப்பின் கீழ், புதிதாக ஆதார் மையம் திறக்க விரும்பும் நபர்கள் முதலாவது அரசு நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். அந்த தேர்வுகளை எழுதுவதற்கான செயல்முறைகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் மையம் அமைப்பு

சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்பது பலரது லட்சியமாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் புதிதாக தொழில் துவங்க அதிகளவு பணத்தை முதலீடாக செலுத்த வேண்டியது அவசியமாகும். ஆனால் தற்போதைய காலத்தில் ஆன்லைன் வசதிகள் மூலம் பலரும் தங்களது லட்சியங்களை அடைந்து கொள்ளும் அருமையான வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இது தவிர அரசும் சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை அளித்து வருகிறது.

அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

அதாவது இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஆதார் மையத்தை திறக்கும் அரசின் நோக்கத்தை மையமாக கொண்டு ஆதார் மையத்தை திறக்க ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆதார் மையங்களை திறக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்றும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் முதலாவதாக ஆதார் மையத்தை திறக்க லைசன்ஸ் தேவைப்படும்.

அதற்காக அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதாவது ஆதார் ஆபரேட்டர், சூப்பர்வைசர் மற்றும் CELC ஆபரேட்டர்களுக்கு UIDAI தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே இதற்கான லைசன்ஸ் கொடுக்கப்படும் என்பது கூடுதல் தகவல். அதற்காக, UIDAI தேர்வுகளை எழுத வேண்டியது அவசியமாகும். இந்த தேர்வுகளை எழுத காணும் வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • முதலில் NSEIT இணையதளத்துக்கு செல்ல வேண்டும்
  • பிறகு ID உருவாக்க வேண்டும்.
  • அதற்கு ஆதார் கார்டை பதிவேற்றம் செய்ய வேண்டும்.அல்லது NSEIT இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்தவராக இருந்தால் ID யை கொடுத்து login செய்யவும்.
  • உங்களுக்கு கொடுக்கப்படும் குறியீட்டு எண்ணை பதிவிடவும்.
  • இந்த எண் UIDAI இன் அதிகாரப்பூர்வ தளத்தில் நீங்கள் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்யும் போது கொடுக்கப்படும்.

அக்.1 முதல் வங்கி சேவைகள், பண விதிகளில் மாற்றம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

  • உள்நுழைவு செய்முறைகள் முடிந்ததும் படிவம் திறக்கப்படும்.
  • அதில் மெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பரை பதிவிவும்.
  • இப்போது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு கடவுச்சொல் அனுப்பப்படும்.
  • கொடுக்கப்பட்ட ID மற்றும் கடவுச்சொல் மூலம் Aadhaar Testing & Certification இணையதளத்தில் லாகின் செய்யவும்.
  • உங்கள் சுய விவர படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • பிறகு preview ஆப்ஷனை கிளிக் செய்தால், மொத்த தகவல்களும் திரையில் தோன்றும்.
  • அவற்றை சரிபார்த்து கொள்ளவும். தவறு இருப்பது தெரிந்தால் அவற்றை திருத்திக்கொள்ளலாம்.
  • இறுதியாக declaration பாக்சில் டிக் செய்து submit பட்டனை கிளிக் செய்யவும்.
    இந்த விண்ணப்ப செயல்முறைகளை முடித்த பிற்பாடு தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் பணம் செலுத்த:
  • அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று MENU ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • இங்கே, கட்டணம் செலுத்துவதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • அதை கிளிக் செய்து வங்கியை தேர்வு செய்யவும்.
  • இப்போது கட்டண செயல்முறையை பூர்த்தி செய்தால் கட்டணம் செலுத்தப்பட்டு விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!