அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

0
அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் இருப்பதால் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை வருவதாக இந்திய ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது.

வங்கி விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் மாத வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை, நீங்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னதாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வழக்கமான வார இறுதி நாட்களைத் தவிர, வங்கிகள் மதம் சார்ந்த பண்டிகை மற்றும் அரசு விடுமுறை என்று கூடுதலாக விடுமுறையை அறிவித்துள்ளது.

அக்.1 முதல் வங்கி சேவைகள், பண விதிகளில் மாற்றம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

மேலும், சமீபத்தில் இந்தியாவின் தேசிய மாதமாக அக்டோபர் மாதத்தை அறிவித்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் சில சிறப்பு பண்டிகைகள் அனைத்தும் அக்டோபர் மாதத்தில் தான் வருகிறது. நாட்டின் பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் பிராந்திய பண்டிகை மற்றும் தேதிகளை பொறுத்து மூடப்படும். மேலும், வங்கி விடுமுறைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேறுபடுகின்றது.

விடுமுறை நாட்களின் பட்டியல்:

  • அக்டோபர் 1 – வங்கிக் கணக்குகளின் அரை ஆண்டு நிறைவு (சிக்கிம்)
  • அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
  • அக்டோபர் 3 – ஞாயிறு (வார விடுமுறை)
  • அக்டோபர் 6 – மஹாளய அமாவாஸ்யே (மேற்கு வங்கம், திரிபுரா, கர்நாடகா)
  • அக்டோபர் 7 – லைனிங்தோ சனமஹி (திரிபுரா, மேற்கு வங்கம், மேகாலயா)
  • அக்டோபர் 9 – இரண்டாவது சனிக்கிழமை
  • அக்டோபர் 10 – ஞாயிறு (வார விடுமுறை)
  • அக்டோபர் 12 – துர்கா பூஜை அல்லது மகா சப்தமி (மேற்கு வங்கம், திரிபுரா)
  • அக்டோபர் 13 – துர்கா பூஜை அல்லது மகா அஷ்டமி (மேற்கு வங்கம், சிக்கிம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மணிப்பூர், திரிபுரா, அசாம்)
  • அக்டோபர் 14 – துர்கா பூஜை, தசரா அல்லது மகா நவமி, ஆயுத பூஜை (மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், திரிபுரா, தமிழ்நாடு, சிக்கிம், புதுச்சேரி, ஒடிசா, நாகாலாந்து, மேகாலயா, கேரளா, கர்நாடகா, ஜார்க்கண்ட், பீகார் மற்றும் அசாம்)
  • அக்டோபர் 15 – துர்கா பூஜை, தசரா, தசரா அல்லது விஜய தசமி (மணிப்பூர் மற்றும் இமாச்சல பிரதேசம் தவிர முழு இந்தியா)
  • அக்டோபர் 16 – துர்கா பூஜை அல்லது தாசைன் (சிக்கிம்)
  • அக்டோபர் 17 – ஞாயிறு (வார விடுமுறை)
  • அக்டோபர் 18 – கதி பிஹு (அசாம்)
  • அக்டோபர் 19 – ஈத்-இ-மிலாத் அல்லது முகமது நபியின் பிறந்தநாள் (குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரகாண்ட், ஆந்திரா, தெலுங்கானா, ஜம்மு, காஷ்மீர், உத்தரபிரதேசம், கேரளா, டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட்)
  • அக்டோபர் 20 – மகரிஷி வால்மீகியின் பிறந்த நாள், லட்சுமி பூஜை, ஐடி-இ-மிலத் (திரிபுரா, பஞ்சாப், மேற்கு வங்கம், கர்நாடகா, ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேசம்)
  • அக்டோபர் 22– வெள்ளிக்கிழமை ஈத்-இ-மிலாத்-நபி (ஜம்மு-காஷ்மீர்)
  • அக்டோபர் 23 – நான்காவது சனிக்கிழமை
  • அக்டோபர் 24 – ஞாயிறு (வார விடுமுறை)
  • அக்டோபர் 26 – சேர்க்கை நாள் (ஜம்மு காஷ்மீர்)
  • அக்டோபர் 31 – ஞாயிறு (வார விடுமுறை)

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!