SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறைகள் இதோ!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறைகள் இதோ!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறைகள் இதோ!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் அரசின் நலத்திட்டங்களைப் பெற விரும்பும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் எண்ணை கண்டிப்பாக வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி:

இந்தியாவில் குடிமக்களின் அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் அனைத்து சேவைகளுக்கும் பயன்படுகிறது. இந்த முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் எண்ணை கண்டிப்பாக வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்களின் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்து வந்தனர். இன்னும் சிலர் இந்த பணியை மேற்கொள்ளவில்லை. அதனால் தற்போது புதிய அறிவிப்பாக அரசின் நலத்திட்டங்களை பெற வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கு எண்ணை ஆதாருடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 2021 அறிவிப்பு – 2 விஞ்ஞானிகள் தேர்வு!

ஆதார் எண்ணை இணைக்காத வாடிக்கையாளர்களுக்கு, அரசாங்கத்திலிருந்து வரும் பணம் கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளது. சில வாடிக்கையாளர்களுக்கு நமது ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா எனபது தெரியவில்லை. இவர்கள் UIDAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி இணைத்து விடுங்கள்.

வங்கி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறைகள் :

வழிமுறை : 1
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ ஏடிஎம்- இல் அவர்களின் 4 டிஜிட் ஏடிஎம் பின் நம்பரை பதிவிட வேண்டும்.
  • பிறகு Account Type-ஐ கிளிக் செய்து, ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
  • பிறகு அதில் சர்வீஸ் ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
  • உடனடியாக வங்கி கணக்கில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு, ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது குறித்து குறுஞ்செய்தி வரும்.
வழிமுறை : 2
  • எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ தளமான http://www.onlinesbi.com என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் My Accounts கிளிக் செய்து, ஆதார் எண்ணை லிங்க் செய்யும் ஆப்ஷனை கிளிக் செய்து ஆதார் விவரங்களை பதிவிட்டு, சப்மிட் கொடுக்கவும்.
  • பிறகு வங்கியில் பதிவு செய்துள்ள எண்ணுக்கு, ஆதார் இணைக்கப்பட்டுள்ளது குறித்து மெசேஜ் வந்துவிடும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!